தக்காளி குருமாவை இதைவிட சுலபமாக, சீக்கிரமாக யாராலயும் வைக்க முடியாது! குக்கரில் 2 விசில் வைத்தால் போதும் சூப்பர் குருமா ரெடி!

thakkali-kuruma1

தக்காளியை வைத்து ஒவ்வொருவர் வீட்டிலும், ஒவ்வொரு முறையில் தக்காளி குருமா வைக்கப்படும். அந்த வரிசையில் மிக மிக சுலபமான முறையில், குக்கரில் 2 விசில் வைத்து, தக்காளி குருமா எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவசர அவசரமாக வேலை செய்யும் சமயங்களில், இட்லி தோசை பூரி சப்பாத்தி இவைகளுக்கு சூப்பரான சைட் டிஷ் இதில் மசாலா பொருட்களின் வாசம் கம கமன்னு வீசும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tomato

Step 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேங்காய் துருவல் – 1/2 முடி, பழுத்த பெரிய தக்காளி – 2 (துண்டு துண்டா கட் பண்ணி போட்டுக்கோங்க), பட்டை – 1, லவங்கம் –  1, சோம்பு – 1/2 ஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல், முந்திரிப்பருப்பு – 4, பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Step 2:
ஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, இப்படி உங்கள் வீட்டில் வாசனைக்கு எந்த பொருட்கள் இருந்தாலும் தாளித்துக் கொள்ளலாம். கூடவே 2 பச்சை மிளகாய் கீனி போட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை, போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இருந்தால் 15 பல் அளவு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இல்லை என்றால் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

onion-cutting

Step 3:
வெங்காயம் நன்றாக வதங்கி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் தக்காளி சேர்த்த விழுதை வெங்காயத்தோடு சேர்த்து, குருவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலக்கிவிட்டு, குக்கர் மூடியைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 விசில் வையுங்கள்.

- Advertisement -

விசில் வரும்போதே வாசனை தூக்கும். அந்த அளவிற்கு குருமா சூப்பராக தயாராகிவிடும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழையை தூவி பரிமாறினால் சுலபமான முறையில், சூப்பர் குருமா தயாராகி இருக்கும். உங்கள் வீட்டில் இந்த முறையில் ஒருவாட்டி குருமாவை ட்ரை பண்ணி பாருங்க! திரும்பத் திரும்ப செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

thakkali-kuruma

பின்குறிப்பு: இந்த குருமாவில் தக்காளியையும் தேங்காயையும் சேர்த்து அரைத்து வைப்பதன் மூலம் இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். உங்களுக்கு புளிப்பு தன்மை அதிகமாக இருக்க வேண்டுமென்றால், தேங்காயோடு நிறைய தக்காளி சேர்த்துக் கொள்ளலாம். புளிப்பு சுவை குறைவாக வேண்டுமென்றால் தக்காளியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். குருமா விற்கு, தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றலாம் இல்லையென்றால் குருமா மிகவும் கெட்டிப் பதத்துக்கு வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது இவ்வளவு சுலபமா? ஒருவாட்டி உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.