அட்டகாசமான முட்டை அடை ரெசிபி

egg adai
- Advertisement -

இட்லி தோசை போலவே அடையும் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு தான். ஆனால் இட்லி, தோசை செய்வது போல அடையை யாரும் அடிக்கடி செய்வது கிடையாது. இந்த இட்லி தோசைக்காவது மாவு ரெடிமேடாக கிடைக்கும் உடனே செய்து விடலாம். அடையை பொருத்த வரையில் ஊற வைத்து அரைத்து செய்ய நேரம் எடுக்கும் என்பதால் பெரும்பாலும் இதை யாரும் செய்வது கிடையாது.

இதர டிபன் வகைகளை போல இந்த அடையும் நினைத்தவுடன் செய்து சாப்பிடும் வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டையை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஒரு அடை ரெசிபியை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

முட்டை – 4,
பொட்டுக்கடலை – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
சோம்பு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் மீடியம் சைஸ் -1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி.

செய்முறை

இந்த அடை செய்ய ஒரு பௌலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த முட்டை கலவையில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்த பிறகு மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அத்துடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கறிவேப்பிலை, கொத்தமல்லியும் பொடியாக நறுக்கி சேர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா போதும் ஒரே நேரத்தில் 100 சப்பாத்தி கூட அசால்டா செஞ்சிரலாம்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்டால் சூப்பரான அடை மாவு தயாராகி விட்டது. இப்போது அடுப்பில் கல் வைத்து சூடானதும் அடை ஊற்றுவது போல கொஞ்சம் தடிமனாக ஊற்றி எடுத்து விட்டால் சூப்பரான அடை தோசை தயார். இதற்கு சைட் டிஷ் கூட எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம் அருமையாக இருக்கும்.

- Advertisement -