முட்டையும், தயிரும் இருந்தா இனி 1 முடி கூட உங்க தலையில் இருந்து வீணாக கொட்டாது தெரியுமா? தலைமுடிக்கு ஈசி ஹேர் பேக்!

egg-white-curd-hair-pack
- Advertisement -

இன்றைய காலகட்டங்களில் தலைமுடி உதிரும் பிரச்சனை நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இருந்து வருகிறது. தலைமுடி பாதி அளவுக்கு வீணாக சென்றதும் தான் நாம் விழித்துக் கொள்கிறோம். தலைமுடி உதிர்வது அதிகரிக்க துவங்கும் பொழுதே எச்சரிக்கையாகி, அதற்கான பராமரிப்பை கொடுத்து விட்டால் பிரச்சனை தீரும். அதிக தலைமுடி உதிர்வுக்கு சுலபமான ஹேர் பேக் எது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவு மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

அதிகமாக முடி உதிர்வதும், அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் தான் சொட்டை தலைக்கு வழி வகுக்கிறது. நாளடைவில் அந்த இடத்தில் சொட்டை விழ ஆரம்பித்து விடும். இதனால் மீண்டும் முடி முளைக்காமல் கூட போய்விடும் அபாயம் உண்டு. முட்டையில் இருக்கக் கூடிய வெள்ளை கரு மற்றும் தயிர் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேக் தயாரித்து போடும் பொழுது நம்முடைய தலைமுடி உதிர்வு பிரச்சனை நிரந்தரமாக கட்டுப்படுகிறது.

- Advertisement -

முட்டையின் மஞ்சள் கருவை கூட தலைமுடிக்கு பயன்படுத்தலாம் ஆனால் அதில் இருக்கும் நீச்ச வாடை யாருக்கும் பிடிப்பதில்லை எனவே முட்டையின் வெள்ளை கருவுடன் தேவையான அளவிற்கு சமமாக கெட்டியான தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய உச்சந்தலையில் இருக்கக்கூடிய முடியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து உங்களுடைய விரல்களால் இந்த கலவையை எடுத்து மண்டை ஓட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

தலை முடி முழுவதும் தடவ வேண்டிய அவசியம் கூட இல்லை. உச்சந்தலையில் இருந்து தான் முடியின் உதிர்வு ஆரம்பிக்கிறது, எனவே அந்த இடத்தில் நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அழுத்தம் கொடுத்து பரபரப்பாக தேய்க்க கூடாது. தலைமுடி உதிரும் பிரச்சினை இருப்பவர்கள் எந்த அளவிற்கு இயற்கை பொருட்களால் இது போல மசாஜ் செய்து ஹேர் பேக் போட்டு தலைக்கு குளிக்கிறீர்களோ, அந்த வேகத்தில் இழந்த முடியும் நீங்கள் மீட்டு விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

முட்டையின் வெள்ளை கரு மற்றும் தயிருடன் சேர்த்து சிறிதளவு தேன் உபயோகப்படுத்தி தலைக்கு குளித்து வந்தால், நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். தேனில் ஏராளமான நற்குணங்கள் உள்ளன. இதை தலைக்கு தடவுவதால் சிலர் முடி நரைக்கும் என்று அச்சப்படுகின்றனர். அப்படி எதுவும் ஆகப்போவதில்லை! வெறும் தேனை தலைக்கு தடவினால் தான் பிரச்சனை. இது போல பேக் போடும் பொழுது தேன் சேர்த்து போடுவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் தலைமுடிக்கு போஷாக்கும், ஈரப்பதமும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
முடி கொட்டிய இடத்தில், உடனடியாக மீண்டும் இரண்டு மடங்கு வேகமாக முடி வளர வேண்டுமா? இந்த 1 கீரை அதற்கு போதுமே.

வறண்ட கூந்தலால் தான் முடி உதிர்வு அதிகரிக்கிறது எனவே முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு இவற்றுடன் சில சொட்டுக்கள் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயையும் நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தியும் நீங்கள் ஹேர் பேக் தயாரித்து மசாஜ் செய்து 15 லிருந்து 20 நிமிடம் நன்கு உலர விட்டு பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசலாம். இந்த பேக் போடும் போது நீங்கள் ஷாம்பூ உபயோகிக்கலாம் ஆனால் ஷாம்பூ உடன் நன்கு தண்ணீர் சேர்த்து கரைத்து பின்னர் பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -