- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் எக் மசாலா. வெறும் 10 நிமிடம் போதும் இதை செய்ய.

பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் எக் மசாலா. வெறும் 10 நிமிடம் போதும் இதை செய்ய.

- Advertisement -

முட்டையை வேகவைத்து அப்படியே கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மாட்டார்கள். அதுவே முட்டையை வேகவைத்து இப்படி மசாலா பொருட்களோடு சேர்த்து கலர் ஃபுல்லா கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. நாவிற்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த எக் மசாலா சுவையாக சுலபமாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஒரு முட்டை மசாலா வறுவல் ரெசிபி கிடையாது. இரண்டு குறிப்புகளை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு 1:
முதலில் 6 முட்டைகளை எடுத்து நன்றாக கழுவி கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி இந்த முட்டைகளை போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்தால் முட்டை நன்றாக வெந்து கிடைக்கும். முட்டைகள் நன்றாக ஆறிய பின்பு தோல் உரித்துக் கொள்ளுங்கள். தோல் உரித்த முட்டையில் கத்தியை வைத்து ஆங்காங்கே கீரிக் கொள்ள வேண்டும். மசாலா உள்ளே இறங்குவதற்காக. ஆனால் முட்டை முழுசாக தான் இருக்க வேண்டும். உடைய கூடாது. வேகவைத்த இந்த முட்டைகள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், சீரக தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு 30 செகண்ட் வரை லேசாக வதக்கி விட்டு, உப்பு – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் போட்டு மீண்டும் இரண்டு வதக்கு வதக்கி, வேக வைத்திருக்கும் முட்டைகளை இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக கலந்து சூடு செய்து மேலே இரண்டு மூன்று கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே பரிமாறினால் சூப்பரான முட்டை மசாலா தயார். (எண்ணெயில் மசாலா பொருட்களை சேர்க்கும்போது அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். மசாலா பொருட்கள் கருகி விட்டால் முட்டை வறுவலில் சுவையாக இருக்காது.)

குறிப்பு 2:
இந்த முட்டை வறுவலில் மசாலா பொருட்கள் சேராக்காமல் வெறும் மிளகாய் தூளை மட்டும் சேர்த்து செய்யப் போகின்றோம். இந்த ரெசிபியும் சூப்பராக தான் இருக்கும். முதலில் 6 முட்டைகளை எடுத்து வேகவைத்து எப்போதும் போல தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய முட்டைகள் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு 30 செகண்ட்ஸ் வரை கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வேக வைத்த முட்டைகளை கவிழ்த்து இந்த எண்ணெயில் வைக்க வேண்டும். ஒரு கொத்து கருவாப்பிலையை தூவிக்கொள்ளுங்கள்.

அதாவது முட்டையின் மஞ்சள் கரு எண்ணெயில் படும்படி முதலில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, மூடி ஒரு நிமிடங்கள் விட வேண்டும். பின்பு மூடியை திறந்து முட்டைகளை திருப்பிப் போட்டு மூடி ஒரு நிமிடம் வரை வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, இதை அப்படியே பரிமாறினாலும் சூப்பராக இருக்கும். இரண்டு நிமிடம் போல முட்டை மசாலா எண்ணெயில் ஊறட்டும். அதன் பின்பு எடுத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்