முட்டையோடு 2 சொட்டு இதை மட்டும் கலந்து தலையில் போட்டால், பிறகு முடிவே இல்லாத முடி வளர்ச்சி தான் உங்களுக்கு.

hair5
- Advertisement -

என்னதான் முட்டி மோதிப் பார்த்தும் முடியை என்னால் வளர்க்கவே முடியவில்லை. குறிப்பாக முடி ஆங்காங்கே உடைந்து, துண்டு துண்டாக நிற்கின்றது. சீரான முடி வளர்ச்சியை பெற குறைந்த செலவில் சுலபமான ஏதாவது வழி உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு முட்டையின் வெள்ளை கரு, கூடவே இந்த ஒரு பொருள் தேவை. அது எந்த ஒரு பொருள். இந்த பேக்கை எப்படி பயன்படுத்துவது. குறிப்புக்குள் சென்று பார்ப்போம் வாருங்கள்.

முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதோடு விட்டமின் E கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும். 2 முட்டையின் வெள்ளை கருவுக்கு, 2 கேப்ஸ்யூலுக்கு உள்ளே இருக்கும் லிக்விட் மட்டும் போதும். முட்டையின் வெள்ளை கருவையும், விட்டமின் E லிக்விடையும் சேர்த்து ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலந்து விட்டால் நமக்கு தேவையான ஹேர் பேக் தயார்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக போட்டுவிட்டு, அதன் பின் முடியின் நுனி வரை நன்றாக இந்த பேக்கை அப்ளை செய்துவிட்டு, 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு ஷாம்பூ போட்டு உங்களுடைய தலையை சுத்தமாக அலசி கொள்ளுங்கள்.

இந்த பேக்கை போட்ட முதல் முறையிலேயே உங்களுடைய முடி நன்றாக திக்காக மாறியிருப்பதை உணர முடியும். வாரத்தில் இந்த பேக்கை 2 நாள் போடுங்கள். தொடர்ந்து 2 மாதம் இந்த பேக்கை போட்ட பிறகு உங்களுடைய முடி இடையிடையே அருந்த விழுவதற்கு வாய்ப்பே இல்லை. துண்டு துண்டாக இருக்கும் முடிகள் அனைத்தும் நீளமாக ஒரே சீராக வளரத் தொடங்கும்.

- Advertisement -

இதோடு சேர்த்து விட்டமின் சத்து அதிகமாக இருக்கக்கூடிய உணவு பொருட்களை சாப்பாட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பச்சை காய்கறிகள் பச்சை கீரைகள் பழவகைகளை அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும்.

நீங்கள் முட்டையை பயன்படுத்த மாட்டீர்கள். சைவம் என்றால் முட்டைக்கு பதிலாக அலோ வேரா ஜெல் சேர்த்து இந்த பேக்கை போடலாம். முட்டையின் வெள்ளைக் கருவுடன், மஞ்சள் கருவையும் சேர்த்து ஹேர் பேக் போட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மஞ்சள் கருவைத் தலையில் போட்டால் அதிகமாக வாடை அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முடியின் அடர்த்தியை இரண்டே மாதத்தில், இரண்டு மடங்கு வரை அதிகரிக்கவும், முடி உதிர்வதை தடுத்து நிறுத்தவும், முடியில் வெடிப்பு வராமல் இருக்கவும் இந்த பேக் உங்களுக்கு உடனடி ரிசல்டை கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -