ஆண், பெண் இருபாலருக்கும் முகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது தான் முகப்பரு. அப்படி முகப்பரு ஏற்பட்ட பிறகு அந்த முகப்பருவால் முகத்தில் பள்ளங்கள் ஏற்படும். இந்த பள்ளங்களினால் முகத்தின் அழகே கெட்டுவிடும். அப்படிப்பட்ட மேடு பள்ளங்களை சரி செய்வதற்கும், ஓபன் போர்ஸ் என்று சொல்லக்கூடிய முக துவாரங்களை சரி செய்வதற்கும் எளிமையான ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும். அப்படிப்பட்ட பொருள் என்ன என்றும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பளிங்கு போன்ற வழுவழுப்பான முகம் பெற வேண்டும் என்று தான் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். ஆனால் வயதின் காரணமாகவோ அல்லது ஹார்மோன்களின் காரணமாகவோ முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களால் அந்த பளிங்கு போன்ற சருமம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். அப்படிப்பட்ட சமயத்தில் நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே நம் முகம் வலுவலுப்பாகவும், அழகாகவும் திகழும்.
இந்த பளிங்கு போன்ற சருமத்தை பெறுவதற்கு நாம் உபயோகப்படுத்தக்கூடிய பொருள்தான் முட்டை. முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் ஒரு ஸ்பூன் எடுத்து பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக கழுவி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். பிறகு இந்த வெள்ளை கருவை கீழிருந்து மேல் நோக்கியவாறு முகத்தில் தடவி விட வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இந்த வெள்ளை கருவானது காய ஆரம்பிக்கும் பொழுது அது ஒரு வித இறுக்கத்தை முகத்தில் ஏற்படுத்தும்.
இவ்வாறு ஏற்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பெரிய துவாரங்கள் அனைத்தும் சுருங்க ஆரம்பிக்கும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். வெறும் தண்ணீரை பயன்படுத்தி தான் கழுவ வேண்டும். சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. முகத்தை கழுவிய ஒரு மணி நேரம் கழித்து வேண்டுமானாலும் சோப்பை நாம் பயன்படுத்தலாம்.
முட்டை உபயோகப்படுத்த விருப்பமில்லாதவர்கள் வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாரை மேலே கூறியது போல முகத்தில் தடவலாம். மேலும் உளுந்து வெந்தயம் இவை இரண்டையும் சரி பங்காக எடுத்து மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டையும் மேலே சொன்னது போல முகத்தில் தடவலாம். இவை அனைத்திலும் நல்ல மாற்றத்தை தரக்கூடியது முட்டையின் வெள்ளை கரு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: வாழைப்பழம் இருந்தா உடனே இந்த கண்டிஷனரை ட்ரை பண்ணி பாருங்க. வாழைப்பழம் போலவே முடி நல்லா வழவழப்பா ஷைனிங்கா இருக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அற்புதமான ஹேர் கண்டிஷனர்.
இவ்வாறு நாம் செய்வதின் மூலம் முகத்தில் ஒருவித இறுக்கம் ஏற்பட்டு தளர்ந்துபோன முகமாக இருந்தாலும் அந்த தளர்வை சரி செய்து முகத்தை இளமையாகவும், பளிங்கு போன்று வழுவழுப்பாகவும், வெண்மையாகவும் மாற்றிவிடும்.