ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை

Love kavithai

உன்னிடம் இருந்து அழைப்பு
வராது என்பதை அறிந்தும்..
ஏனோ என் மனம் தவிக்கிறது
ஒன்றுவ்வொரு முறையும்
என் கை பேசி சிணுங்குகையில்…

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
வலியின் வார்த்தைகள் – காதல் கவிதை

ஆரம்ப காலத்தில் புறாக்கள் மூலமாக காதல் தூது அனுப்பப்பட்டது. அதன் பிறகு கடிதங்கள் மூலம் காதலர்கள் தொடர்பு கொண்டனர். அதன் பிறகு தான் இன்டர்நெட் மூலம் காதலர்கள் கருத்துக்களை பரிமாற்ற துவங்கினர். தற்போது காதலர்கள் அதிக அளவு பயன்படுத்துவது அலைபேசியை தான். அலை பேசி இல்லை என்றால் காதலே இல்லை என்ற அளவிற்கு காலம் மாறிவிட்டது.

காதலர்களின் அலை பேசியை கவனித்தால் தெரியும் அவர் ஒரு நாளில் குறைந்தது 3 மணி நேரம் அலைபேசியில் உரையாடி இருப்பார்கள். நூற்றுக்கணக்கில் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பார்கள். அவர்களின் கையில் ஆறாம் விரலாய் எப்போதும் அலை பேசி இருக்கும். அந்த அளவிற்கு அவர்கள் அலை பேசியோடு ஒன்றி இருப்பார்கள். அது அவர்கள் அலை பேசி மீது வைத்துள்ள அன்பு அல்ல. அவர்கள் தன் காதல் மேல் வைத்துள்ள அன்பு அது. பிரிந்த காதலர்கள் பலர் தங்கள் அலைபேசியை எந்நேரமும் பார்த்து ஏங்கி தவிப்பதும் பிறகு ஏமாற்றத்தோடு அதை உதறி தள்ளுவது இந்த காலத்தில் உள்ள ஒரு வழக்கம் தான்.

Love Kavithai image
Love Kavithai

நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.