இழந்த பொருளை திரும்பப் பெற வழிபாடு

bhairavar deepam
- Advertisement -

மனிதனாகப் பிறந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் குணம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அந்த உதவியே பெரும் பிரச்சினையாக போய் முடிகிறது. ஒருவருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் பொழுது உடன் பழகியவரிடம் பணத்தையோ, நகையோ, பொருளையோ கேட்கும்பொழுது உதவும் மனப்பான்மையில் அதை கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த பொருளை திரும்பப் பெற வேண்டும் என்று நினைத்து போய் கேட்கும் பொழுது கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி கொடுக்க வேண்டிய பொருளை கொடுக்காமல் ஏமாற்றுபவர்களிடமிருந்து பொருட்களை வாங்க வைரவரை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய தேவைக்காக நாம் சேர்த்து வைத்திருக்கும் பணமோ, நகையோ அல்லது ஏதாவது ஒரு பொருளோ இப்படி எதுவாக இருந்தாலும் அதை பிறர் உதவி என்று கேட்டு வரும் பொழுது திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அதை கொடுப்போம். சிறிது காலம் பொறுமையாகவும் இருப்போம். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களிடம் சென்று கேட்கும் பொழுது அவர்கள் நமக்கு மதிப்போ மரியாதையோ கொடுக்காமல் நம்மை ஏமாற்றும் வகையில் பேசி அனுப்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு கை கொடுத்து காப்பாற்றக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் பைரவர்.

- Advertisement -

ஏமாற்றும் எண்ணம் கொண்டவரிடம் இருந்து நாம் கொடுத்த பொருளை திரும்ப பெறுவதற்கு பைரவரை ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபட வேண்டும். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பகலில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதற்கு நமக்கு 8 அகல் விளக்குகள் தேவைப்படும். பைரவரின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு முன்பாக 8 அகல்விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

பிறகு பஞ்சுத்திரி போட வேண்டும். அடுத்ததாக ஒவ்வொரு விளக்கிலும் மிளகை மூட்டையாக கட்டி போட வேண்டும். பிறகு அந்த தீபத்தை ஏற்றும் பொழுது பைரவரின் மந்திரத்தையோ அல்லது அவரின் பெயரையோ உச்சரித்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டும். பைரவருக்கு இரண்டு மூன்று காய்கறிகள் சேர்த்தார் போல் சாம்பார் சாதம் செய்து நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்துவர நமக்கு நம்மை ஏமாற்றியவர்களே நம்மிடம் வாங்கிய பொருளை திரும்பக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். பணத்தை கொடுத்து ஏமாந்து இருந்தால் மஞ்சள் நிற துணியில் 12 மிளகுகளை கட்டி விளக்கில் போட வேண்டும். நகையை கொடுத்து ஏமாந்து இருந்தால் வெள்ளை நிற துணியில் ஆறு மிளகுகளை கட்டி, அகலில் போட வேண்டும். பொருட்களாக கொடுத்து ஏமாந்து இருந்தால் நீல நிற துணியில் 8 மிளகுகளை கட்டி விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பணமும் இல்லை, நகையும் இல்லை, பொருட்களும் இல்லை வேறு ஏதாவது கொடுத்து ஏமாந்து இருந்தால் சந்தன நிற துணியில் 20 மிளகுகளை மூட்டையாக கட்டி அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். எந்த பொருளை கொடுத்து ஏமாந்து திரும்ப கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறோமோ அந்த பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் பைரவருக்கு இந்த முறையில் தீபமேற்றி நெய்வேத்தியம் செய்து வழிபட்டு வர விரைவிலேயே அவர்கள் ஏமாந்த பொருட்கள் அவர்களை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்

மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த பைரவர் வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து இழந்த பொருளை மீட்டுப் பெறுவோம்.

- Advertisement -