இழந்த செல்வத்தை திரும்ப பெற வாராகி வழிபாடு

varahi valipadu
- Advertisement -

ஒருவர் பிறக்கும் பொழுது எதையும் எடுத்து வருவதில்லை அதே சமயம் இறக்கும்பொழுது கண்டிப்பான முறையில் பேரும் புகழும் தர்மங்களும் அவருடன் வரும் என்று கூறப்படுகிறது. ஒருவருடைய வாழ்நாளில் அவர் கஷ்டப்பட்டு உழைத்து தனக்கு தேவையான பணத்தை சம்பாதித்து அதன் மூலம் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடுவார். இதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோ தன்னுடைய முன்னோர்களின் சொத்துக்களை கஷ்டப்பட்டு உழைத்து இரட்டிப்பாக்குவார்கள். யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் கூட தங்களுடைய கடினமான உழைப்பால் ஊர் போற்றும் அளவிற்கு பெரிய மனிதனாக உயர்ந்து இருப்பார்கள்.

இப்படிப்பட்ட முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும் அந்த முன்னேற்றத்தை பெறும் பொழுது நம் மனதிற்குள் அளப்பறியாத மகிழ்ச்சி என்பது ஏற்படும். இந்த மகிழ்ச்சி அனைத்தையும் தவிடுபொடி ஆக்கும் அளவில் திடீரென்று ஏதோ ஒரு சூழ்நிலையில் இழக்க கூடாதவற்றை எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாமல் போனவர்கள் பலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அனைவரும் வாராகி அம்மனை பற்றி அறிந்திருப்போம். ராஜராஜேஸ்வரி அம்மனின் பாதுகாவல் தெய்வங்களாக திகழக்கூடிய சப்த கன்னிகளில் ஒருவராக இருப்பவர்தான் வாராகி. ஐந்தாவதாக இருப்பதால் பஞ்சமி திதி என்பது வாராஹி அம்மனுக்கு மிகவும் விசேஷகரமான திதியாக கருதப்படுகிறது. என்னதான் உக்கிர தெய்வமாக இருந்தாலும் மனதார வாராஹி அம்மனை வணங்கி விட்டு அவளிடம் சரணாகதி அடைந்து விட்டால் ஒரு குழந்தையை பாதுகாக்கும் தாயைப் போல மாறிவிடுவாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை இழந்த செல்வத்தை திரும்ப பெறுவதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

கிரகங்களின் அடிப்படையில் நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இவை அனைத்தையும் சரி செய்வதற்கு நமக்கு உகந்த கிழமையாக திகழ்வது சனிக்கிழமை தான். அதனால் இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மன் ஆலயத்திற்கு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செல்ல வேண்டும்.

- Advertisement -

கரு நீல துணியை சதுரமாக வெட்டி அதில் சிறிது வெண்கடுகை போட்டு கருநீல நூலால் மூட்டையாக கட்டி தயார் செய்து எடுத்துக் கொண்டு இதனுடன் புதிதாக வாங்கிய அகல் விளக்கையும் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நல்லெண்ணெயும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். பிறகு அம்மனுக்கு சாற்றுவதற்காக செவ்வரளி பூக்களால் ஆன மாலையை வாங்கிக் கொண்டு போக வேண்டும்.

அம்மனுக்கு முன்பாக இரண்டாக விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி நாம் எடுத்து வந்திருக்கும் வெண்கடுகு மூட்டையும் வைத்து தீபமாக ஏற்றிவிட்டு வாங்கி வந்திருக்கும் மாலையை வாராகி அம்மனுக்கு கொடுத்த சாற்ற சொல்ல வேண்டும். பிறகு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் சனிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்துவர இழந்த செல்வத்தை திரும்ப பெறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

- Advertisement -

அருகில் வாராகி அம்மன் ஆலயம் இல்லை என்பவர்கள் வீட்டிலேயே வாராகி அம்மன் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். வாராகி அம்மன் படம் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு முன்பாகவே இந்த இரண்டு அகல்களை வைத்து தீபம் ஏற்றலாம். ஒரு முக்கியமான குறிப்பு இந்த அகல்களை வேற எந்த தீபமும் ஏற்றுவதற்கு உபயோகப்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பம் நீங்க பரிகாரம்

மிகவும் எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த இந்த வாராஹி அம்மன் வழிபாட்டை செல்வத்தை இழந்தவர்கள் நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் விரைவிலேயே இழந்த செல்வத்தை திரும்ப பெற முடியும்.

- Advertisement -