ஏழரை சனி பரிகாரம் தமிழில்

Elarai sani pariharam in Tamil
- Advertisement -

நவகிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய ஒரு கிரகமாக இருப்பது சனி கிரகம். அதுவும் ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த ராசிக்கு ஏழரை சனி தொடங்கி விட்டதை அறிந்தால் ஒருவித மன பயத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். எனினும் ஏழரை சனி காலத்தில் சனி பகவானுக்கு முறையான வழிபாடு மற்றும் பரிகாரங்களை செய்வதன் மூலம், ஏழரை சனி காலத்தில் தீவிரமான பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் ஏழரை சனி நடைபெறும் போது செய்ய வேண்டிய ஏழரை சனி பரிகாரம் (Elarai sani pariharam in Tamil) என்னென்ன? என்பன குறித்து குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏழரை சனி பாதிப்பு குறைய பரிகாரம்

ஏழரை சனி நடைபெறும் காலத்தில் ஏழரை சனி பாதிப்புகள் குறைய செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரம் பற்றி இங்கே நாம் பார்க்கலாம். முதலில் 8 இரும்பு வளையங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்தில் வருகின்ற ஏதாவது ஒரு சனிக்கிழமை தினத்தன்று, சனி ஓரை நேரங்களான காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 முதல் 2 மணி வரை, இரவு 8 முதல் 9 மணி வரையிலான இந்த மூன்று சனி ஓரை நேரங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஓடும் ஆற்றின் நீரில் அல்லது கடல் நீரிலோ தெற்கத்திசையை பார்த்தவாறு நின்று, இந்த எட்டு இரும்பு வளையங்களையும் உங்கள் இரு கரங்களிலும் வைத்துக் கொண்டு, தங்களுக்கு ஏழரை சனி காலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என மனதில் வேண்டிக் கொண்டு அந்த நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும்.

- Advertisement -

ஜாதகப்படி தங்களது ராசிக்கு ஏழரை சனி காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தால், பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க இந்த ஒரு பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும். ஏழரைச் சனி நடைபெறும் ராசியினர் ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற தேய்பிறை சனிக்கிழமை தினத்தன்று திருநள்ளாறு அருள்மிகு தர்பார்னேஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவே சென்று, கோயில் அருகில் தங்கி, மறுநாள் காலை எழுந்து அந்த கோயில் குளத்தில் நீராடிய பின்பு பழைய துணிகளை அந்த குளத்தின் ஓரத்தில் விட்டு, புத்தாடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்குள் சென்று சிவபெருமான் மற்றும் அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும் (Elarai sani pariharam in Tamil).

பிறகு அங்கிருக்கும் பைரவர் சந்நிதிக்கு சென்று 8 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு சனி பகவான் சன்னதிக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் தங்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பிறகு சனீஸ்வரன் சந்நிதிக்கு எதிரில் 8 அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சிறிதளவு கருப்பு எள் போட்டு தீபங்களை ஏற்ற வேண்டும். இதன் பிறகு கோயில் வளாகத்தை 8 முறை பிரதிக்ஷணம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்வதால் ஏழரை சனி காலத்தில் சனி பகவானின் பாதகமான பலன்கள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

ஏழரை சனி காலத்தில் இறைவழிபாட்டை அதிகம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகள் தோறும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய இரண்டு தெய்வங்களின் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு புதிதாக வாங்கிய வெற்றிலைகளில் சிறிதளவு பாக்கு சீவல்களை வைத்து, அதை மஞ்சள் நிற நூல் கொண்டு கட்டி மாலையாக கோர்த்து, ஆஞ்சநேயருக்கு மாலையாக சாற்றி வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சிவன் பரிகாரம்

அதேபோன்று விநாயகர் பெருமான் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கற்பூர சூடம் காட்டி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்ய வேண்டும். மற்ற நாட்களில் இல்லை என்றாலும் சனிக்கிழமைகளில் கட்டாயம் காகங்களுக்கு கருப்பு எள் கலந்த தயிர் சாதத்தை உணவாக வைக்க வேண்டும். மேற்சொன்ன இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்பவர்களுக்கு ஏழரை சனி காலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் (Elarai sani pariharam in Tamil) சனி பகவான் அருள் புரிவார்.

- Advertisement -