சிவன் பரிகாரம்

sivan pariharam in tamil
- Advertisement -

சிவபெருமான் என்பவர் பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தானே ஏற்று, இன்பங்களை மட்டுமே பிறருக்கு தரும் தெய்வம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் பொதுவாக ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் அனைத்துமே சிவன் கோயில்களை மையப்படுத்தியே செய்யப்படுகின்றது. அந்த வகையில் சிவபெருமானை மையப்படுத்தி செய்ய கூடிய சிவன் பரிகாரங்கள் ( Sivan pariharam in Tamil ) என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் பரிகாரம்

சிவன் கோயில்களில் செய்யப்படும் மிகவும் வித்தியாசமான பரிகாரம் ஒன்று உண்டு. தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நன்றாக வாழ வேண்டும் என எண்ணி பிச்சை எடுத்து, அதன் மூலம் வரும் தொகையை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய பரிகாரம் நிஜமாக உள்ளது என பலருக்கும் தெரியாது. பொதுவாக ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகளே பிறக்காமல் போவது, முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போவது, ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தை ஆரோக்கியம் இன்றி துன்புறுவது போன்ற நிலை ஏற்பட அந்த பரம்பரையில் இருக்கின்ற முன்னோர்களின் சாபமே காரணம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

இத்தகைய குல சாபம் தீர மேற்சொன்ன நிலையில் இருக்கின்ற பெற்றோர்கள், ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்கு சென்று அந்த கோயிலுக்கு வருகின்ற இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கும் தம்பதிகளிடம் பிச்சை பெற்று, அந்த காணிக்கையை அவர்கள் பிச்சை எடுத்த சிவன் கோயிலின் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவதால், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற முன்னோர்கள் சாபம் நீங்கி அவர்களின் வம்சம் மேன்மேலும் தழைக்கும்.

நமக்கு உடல் ஆரோக்கியத்தை விட சிறந்த சொத்து வேறெதுவமில்லை. ஆனால் ஒரு சிலருக்கு எத்தனை மருந்துகள் வாங்கி சாப்பிட்டாலும் சில நோய்கள் தீரவே தீராது. இதற்குக் காரணம் அவர்களின் கர்ம வினை என ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். இப்படி தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய ஆற்றல் வாய்ந்த ஒரு சிவ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், தங்களின் நோய் பாதிப்பு முற்றிலும் தீர அல்லது குறைய மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை சதுர்த்தி ஆகிய இந்த இரண்டு தினங்களில் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு. சிவபெருமானை வழிபாடு செய்வதால் எப்படிப்பட்ட வியாதிகளும் குணமாகத் தொடங்கும். உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு மேற்சொன்ன சிவபெருமான் விரதம் இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இந்த அஷ்டமி, சதுர்த்தி தின சிவபெருமான் விரதத்தை மாதந்தோறும் அனுஷ்டிப்பவர்களுக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

பிறந்தது முதல் தற்போது வரை வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே சந்தித்து, நொந்து போனவர்கள் இந்த ஒரு சிவ வழிபாடு பரிகாரம் ( Sivan pariharam in Tamil ) செய்து பார்க்கலாம். சிவபெருமான் வழிபாட்டிற்குரிய சிறந்த நாளாக இருப்பது திங்கட்கிழமை. அதிலும் இந்த திங்கட்கிழமையில் அமாவாசை திதி வருவது மிகவும் விசேஷமானதாகும். இந்த திங்கட்கிழமை அமாவாசை தினத்தன்று சிவபெருமான் கோவிலுக்கு சென்று, சிவபெருமான் – அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து திங்கட்கிழமை அமாவாசை திதிகளில் சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அற்புதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: தார தோஷம் பரிகாரம்

பெரும்பாலான சிவன் கோயில்களில் வன்னிமரம் மற்றும் வில்வ மரம் கண்டிப்பாக இருக்கும். மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினங்களில் சிவன் கோயிலுக்கு சென்று, இந்த வன்னி மரம் அல்லது வில்வ மரத்திற்கு தீபம் ஏற்றி, 21 முறை வலம் வந்து தங்களின் குறைகளை கூறி வழிபாடு செய்வதால், அது கூடிய விரைவில் நிவர்த்தியாகி நீங்கள் விரும்பிய பலன்களை கொடுக்கும்.

- Advertisement -