ஏழரை சனி தோஷங்களை நீக்கும் பரிகாரம்

elarai-sani
- Advertisement -

எப்பேர்ப்பட்ட மனிதர்களும் தங்களின் வாழ்வில் எவ்வளவு செல்வங்களை பெற்றாலும், இவை எல்லாவற்றையும் விட மிகவும் விரும்புவது தங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்பது தான். ஒரு நபரின் ஆயுளை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பவர் சனி பகவான் ஆவார். அந்த சனி கிரகத்தின் பெயர்ச்சி ஒரு நபருக்கு மிகுந்த நற்பலன்கள் அல்லது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு கிரக பெயர்ச்சியாக இருக்கிறது. இதில் “ஏழரை சனி” என்பது ஒரு ஜாதகருக்கு ஏழரை ஆண்டு காலம் சனி பகவானால் ஏற்படும் சோதனைகள் நிறைந்த காலமாக இருக்கிறது. இந்த ஏழரை சனி காலத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sani Baghavan

ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் “நீதி தேவன்” என குறிப்பிடப்படுகிறார். அதாவது ஒரு நபர் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளுக்கு கூட அவருக்கான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டும் தன்மை கொண்டவர் எனவே தான் பெரும்பாலான மக்கள் சனி கிரக பெயர்ச்சி என்றாலே மிகவும் கலங்குகின்றனர். ஏழரை சனி காலம் என்பது ஒரு நபரின் வாழ்நாளில் மூன்று முறை வரும். முதல் முறை வரும் ஏழரை சனி மங்கு சனி எனப்படும். இரண்டாம் முறை வரும் ஏழரை சனி பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை வரும் ஏழரை சனி மாரக சனி என்றும் அழைக்கப்படுகிறது. எப்படிப்பட்ட ஏழரை சனி காலத்திலும் பாதக பலன்கள் ஏற்படுவதை குறைத்து நற்பலன்கள் ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஏழரை சனி நடக்கின்ற நபர்கள் ஏழரை சனி நடக்கும் காலமான ஏழரை ஆண்டுகள் காலத்திற்கும் சனி கிழமைகளில் கோவில்களில் உள்ள நவகிரக சந்நிதிக்கு சென்று சனி பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபடுவது பாதகங்கள் ஏற்படுவதை குறைக்கும். இக்காலங்களில் தினந்தோறும் ஆஞ்சேநேயர் பெருமானையும், விநாயகர் பெருமானையும் மந்திரங்கள் துதித்து வழிபடுவது நல்லது. வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பரிகாரம் ஆகும்.

kaala bairavar

சனிக்கிழமைகளில் காலையில் சிறிதளவு தயிர் சாதத்தில், கொஞ்சம் கருப்பு எள் கலந்து காகங்களுக்கு உணவாக வைத்து பின்பு நீங்கள் உணவருந்தி வருவது உங்களின் ஏழரை சனி தோஷங்களின் கடுமையை குறைக்கும். சனிக்கிழமைகளில் உங்கள் வீடுகளுக்கு யாசகம் கேட்டு வரும் யாசகர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் முடிந்தால் உணவாகவோ அல்லது பொருளாகவோ தானம் அளிப்பது நல்லது. சனிக்கிழமைகள் தோறும் ஆண்கள் நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் வரும் ராகு காலத்தில் பைரவரை வணங்கி வருவதும் ஏழரை சனியின் பாதக பலன்களை தடுக்கும் சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ரிஷப ராசியினருக்கான பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Elarai sani pariharam in Tamil or Ezharai sani pariharam in Tamil. It is also called as  Elarai sani for mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam, virichigam, dhanusu, magaram, kumbam, meenam rasi pariharam in Tamil

- Advertisement -