ரிஷப ராசிகாரர்களுக்கான பரிகாரங்கள்

rishabam-raasi

மனிதர்கள் அனைவருமே நவகோள்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் இருக்கின்றனர். நமது இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி மனிதர்கள் அனைவருமே ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட 12 ராசிகளுக்கு உட்பட்டே பிறக்கின்றனர் என்பது திண்ணம். இந்த 12 ராசிகளில் முதல் ராசியான மேஷத்திற்கு அடுத்து இரண்டாவது ராசியாக வருவது “ரிஷபம்” ராசி இந்த ரிஷப ராசியினர் தங்களின் வாழ்நாளில் நன்மைகளை பெறுவதற்கான பரிகாரங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

12 ராசிகளில் இரண்டாவதாக வரும் ரிஷப ராசி சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் பகவானுக்குரிய ராசியாகும். ஜோதிடத்தில் ரிஷப ராசிக்குரிய சின்னமாக எருது இருக்கிறது. ரிஷப நல்ல மனஉறுதி கொண்டவர்கள். பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள் ஓரளவிற்கு செல்வ செழிப்புள்ள குடும்பங்களிலேயே பிறக்கின்றனர். வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் என்றென்றும் நன்மைகள் ஏற்பட கீழ்கண்ட பரிகாரங்களை திடசித்ததோடு செய்து வருவது சிறந்த பலன்களை கொடுக்கும்

ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் நல்ல பலன்களை பெறவும், அதிர்ஷ்டங்கள் ஏற்படவும் தங்களின் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமைகள் தோறும் மல்லி பூக்கள் சமர்ப்பித்து, கேசரி அல்லது வேறு எதாவது இனிப்புகளை நைவேத்தியம் வைத்து வழிபட்டு வருவது ரிஷப ராசியினருக்கு பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும். ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்குரிய “கஞ்சனூர் சுக்கிர பகவான்” கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது மிகவும் சிறப்பானதாகும்.

feeding birds

உங்களுக்கு பொருளாதார வசதி நன்கு இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு ஒரு பசுமாட்டை தானமாக வழங்குவது சிறந்த அதிர்ஷ்டங்களை கொடுக்கும். அப்போது புனித நதிகளில் நீராடி அந்த நதிகளை ஒட்டி அமைந்தவாறு இருக்கும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதால் உங்கள் ராசிக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கும். எக்காரணம் கொண்டும் நீங்கள் கிளிகள், வண்ண பறவைகள் போன்றவற்றை கூண்டில் அடைத்து வளர்க்கக்கூடாது. இது பிராணிகள் மீது ஆதிக்கம் மிகுதியாக கொண்ட உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின் தோஷத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். அதற்கு பதிலாக உங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நாய்கள், பசுமாடுகள் மற்றும் பறவைகளுக்கு தினமும் உங்களால் முடிந்த அளவு உணவிட்டு வருவது உங்கள் ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய சிறந்த பரிகாரகங்களில் ஒன்றாகும்.

இதையும் படிக்கலாமே:
நிரந்திர வேலை, தொழில் அமைய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rishaba rasi pariharam in Tamil.