இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றிகும் ஏற்ற சுவையான காரசாரமான எள்ளு சீரகம் சேர்த்த சட்னி இப்படி செஞ்சு பாருங்க.

ellu-chutney
- Advertisement -

பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும் எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை, அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம். அன்றாட உணவில் எள்ளை அதிக அளவில் சேர்த்து கொள்வதில்லை. நாம் பல வகை துவையல் கேள்விப்பட்டிருப்போம். அதில் இந்த எள்ளு சீரக துவையல் உடம்புக்கும் மிகவும் நல்லது. அது மட்டும் அல்ல செய்ய மிகவும் சுலமபாகவும், சுவையாகவும் இருக்கும். அதிக அளவு நன்மைகள் கொண்ட எள்ளு, சீரகம் இரண்டையும் சட்னி அரைத்து வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருள்: சீரகம் – 1 டீஸ்பூன், வெள்ளை எள்ளு – 50 கிராம், பச்சை மிளகாய் – 10, பூண்டு – 5 பல், புளி – எலுமிச்சை பழ அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 5, தேங்காய் பத்தை – 2, உப்பு – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பைப் பற்றி வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டு நன்றாக பொரிய விடுங்கள், சீரகம் பொரிந்ததும் எள்ளை கொட்டி நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள் (இதற்கு வெள்ளை எள் தான் நன்றாக இருக்கும்). பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எள்ளை தனியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து விடுங்கள்.

மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து அதே கடாயை வைத்து மீதம் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி விடுங்கள். அதில் பத்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். (காரம் அதிகமாக தேவை என்றால் இன்னும் இரண்டு மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்). அடுத்து ஐந்து பல் பூண்டு, புளி, இவைகளை சேர்த்து நன்றாக வதங்கியதும், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அதுவும் வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் எள்ளு, சீரகத்தை போட்டு அதனுடன் வதக்கய பச்சை மிளகாய், பூண்டு, புளி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்த பின், இத்துடன் இரண்டு தேங்காய் பத்தையை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஐந்து சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் உப்பு இரண்டையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி (தேவைப்பட்டால்) மீண்டும் ஒருமுறை அரைத்து விடுங்கள். இப்போது கொஞ்சம் நன்றாகவே அரைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். சுவையான காரசாரமான எள்ளுசீரக துவையல் தயார்.

- Advertisement -