கடன் தீர எலுமிச்சம் பழ பரிகாரம்

money lemon
- Advertisement -

கடனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையும் இருக்கும். யாரும் கடனை வாங்கும் பொழுது அடைக்கக் கூடாது என்று வாங்குவது இல்லை. எப்படியாவது கடனை அடைத்து விட வேண்டும் என்றுதான் வாங்குவார்கள். அதே போல் யாரும் கடனை விருப்பப்பட்டு வாங்குவது கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியில்லாமல் தான் கடனை வாங்குவார்கள். எப்படி வாங்கினாலும் கடனை தீர்த்து தானே ஆகவேண்டும். இல்லையேல் அதனால் நமக்கு பிரச்சனையே உண்டாகும். இந்த கடன் பிரச்சினை தீருவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் கடனை தீர்ப்பதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. பரிகாரங்களை செய்தால் மட்டும் கடன் தீர்ந்து விடுமா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். முதலில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி கடன் வாங்கினோம் என்றால் நம்முடைய வருமானத்தில் அந்த கடனை அடைக்க முடியுமா என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசித்த பிறகு தான் வாங்க வேண்டும். இப்படி யோசிக்காமல் கடன் கிடைக்கிறது என்பதற்காக தங்கள் இஷ்டத்திற்கு கடனை வாங்கினால் எந்த பரிகாரம் செய்தாலும் அந்த கடனை அடைக்க முடியாது.

- Advertisement -

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அதை அடைக்க முடியும் என்று நம்பிக்கையில் வாங்கினோம். நம்முடைய இக்கட்டான நிலையில் அதை அடைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்னும் பட்சத்தில் நம்முடைய விடாமுயற்சியை நாம் செய்வோம். அப்படி செய்தும் நம்மால் கடனை அடைக்க முடியவில்லை என்றால் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மாதத்தில் மூன்று நாட்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் செய்ய வேண்டும். இதற்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முந்தைய நாள் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சூட்டி விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து அதை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு வீட்டில் உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்திற்கு முன்பாக இந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் வைத்து மூடிக்கொண்டு உங்களுடைய கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வழிகள் என்னவோ அந்த வழிகள் வெற்றியடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று நேர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வேண்டி முடித்த பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி விட வேண்டும். இந்த மஞ்சள் துணியை அப்படியே நீங்கள் எந்த தெய்வத்திடம் வழிபட்டீர்களோ அந்த தெய்வத்தின் பாதத்தில் வைத்து விடுங்கள். அன்றைய தினம் முழுவதும் இந்த எலுமிச்சம்பழம் அப்படியே இருக்கட்டும். அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்கள் தலையணைக்கு கீழே வைத்துவிட்டு படுத்து தூங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு உங்களின் தலையை நீங்களே வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுத்தி விட்டு ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உங்களுக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனைகளும், பண பிரச்சனையும் தீர்ந்து பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: இழந்ததை மீட்க முருகன் வழிபாடு

இந்த தாந்திரீக பரிகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் செய்து உங்களுடைய கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வரலாம்.

- Advertisement -