ஒரு சின்ன எலுமிச்சை கிளை இருந்தால் கூட போதும். அதை வைத்து ஆறே மாதத்தில் கொத்துக் கொத்தாய் எலுமிச்சைகளை காய்க்க வைத்து விடலாம்.

- Advertisement -

பொதுவாக ஒரு எலுமிச்சை செடி வைத்து வளர்த்து அதில் காய்கள் வைக்க வேண்டும் என்றால் மூன்றிலிருந்து நான்கு வருடம் வரை ஆகும். ஆனால் இந்த முறையில் வளர்க்கும் போது 6 மாதத்தில் செடிகள் நன்றாக வளர்வதுடன் காய்களும் அதிக அளவில் வைக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி நட வேண்டும் என்பதை எல்லாம் இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முறைக்கு ஒரே ஒரு எலுமிச்சை கிளை இருந்தால் போதும். அதற்கு நன்றாக காய்த்து கொண்டிருக்கும் மரத்தின் கிளையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்க்காத மரத்திலிருந்துதோ அல்லது புதிதாக துளிர்க்கும் மரத்தின் கிளையில் இருந்தோ எடுக்கக் கூடாது.

- Advertisement -

இப்படி எடுத்து வந்த கட்டிங்ஸ் ஒரு பத்திலிருந்து பதினைந்து அடி வரை இருந்தால் போதும் மிகவும் பெரியதாகவும் இருக்க வேண்டாம். கட்டீங்ஸ் சுற்றி உள்ள முட்களை நறுக்கி எடுத்து விடுங்கள். அதன் பிறகு தரையில் நடபோகும் இடத்தில் அறை இன்ச் அளவிற்கு அதன் மேல் தோலை நன்றாக சீவி எடுத்துக் விடுங்கள்.

தோல் சீவியை இந்தப் பகுதியை சுற்றிலும் தேன் அல்லது கற்றாழையை தடவி வைத்து விட்டு விடுங்கள். கட்டிங்ஸின் மேற்புறம் வெயில் படாத அளவிற்கு டேப்பை சுற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது செடி நட மண் கலவையை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு தேங்காய் நார், உரம் மண்புழு உரம் இரண்டையும் சமமாக எடுத்து கலந்து கொள்ளுங்கள். இத்துடன்  கொஞ்சம் மண் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தச் செடி முதலில் துளிர்க்க ஒரு சின்ன யூஸ் அண்ட் த்ரோ கப் இருந்தால் கூட போதும். அதன் முக்கால் பாகம் வரை இந்த மண் கலவையை நிரப்பி ஒரு குச்சி வைத்து நடுவில் செடி நட ஒரு துளை போல போட்டுக் கொள்ளுங்கள். கிளையை நேரடியாக செடியில் உள்ளே சொருகும் போது அதில் ஒட்டி இருக்கும் தேன் அனைத்தும் வீணாகி விடும். இப்படி துளை போட்ட பிறகு அதில் தேன் தடவிய எலுமிச்சை கிளையை வைத்த பிறகு அதன் மேலே மண்ணை அழுத்தி விட்டு அதன் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள்.

இப்போது இந்த பிளாஸ்டிக் கப்பில் வைத்திருக்கும் செடியின் மீது இன்னொரு யூஸ் அண்ட் த்ரோ கப்பையே கூட மேலே மூடி வைக்கலாம். இதன் மீது வெயில் படக்கூடாது என்பதற்காக த்தான் இந்த முறை. இதில் தண்ணீர் இல்லாமல் காய்ந்தால் மட்டும் லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: கற்றாழை இருந்தா போதும் அதை வச்சு உங்க ரோஜா செடியை நல்லா தள தளன்னு வளர்ந்து, நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த கட்டிங்ஸ் வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. நல்ல நிழலான இடத்தில் தான் வைத்து பராமரிக்க வேண்டும். 30 நாட்களில் கிளையில் புதிதாக இலைகள் முளைத்திருக்கும். அதன் பிறகு எடுத்து நீங்கள் வேறொரு தொட்டியிலோ அல்லது தரையிலோ செடியை வளர்க்க ஆரம்பிக்கலாம். இந்த முறையில் வளர்க்கும் போது செடியானது சீக்கிரம் வேர் பிடித்து வளர்ந்து அதிக காய் கொடுக்கும்.

- Advertisement -