கற்றாழை இருந்தா போதும் அதை வச்சு உங்க ரோஜா செடியை நல்லா தள தளன்னு வளர்ந்து, நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

வீட்டில் வளர்க்கும் செடிகளை பொருத்த வரையில் நாம் ஏதாவது உரங்களை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் மாடி தோட்டம் வைத்து பராமரிப்பவர்கள் இதை சரியான முறையில் செய்ய வேண்டும். செடிகளை தரையில் வைக்காமல் தொட்டியில் வைத்து வளர்க்கும் போது, அதற்கான ஊட்டச்சத்துகளை கொஞ்சம் அதிகமாகவே கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதற்கான ஒரு உரத்தை தான் எப்படி தயாரிப்பது என்று இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த உரம் தயாரிக்க நமக்கு காய்ந்த இலை தழைகள், கிச்சன் கழிவுகள், மண் இத்துடன் கற்றாழை அனைத்தும் தேவை. இதை நாம் கம்போஸ்ட் செய்யும் முறையில் தான் தயாரிக்க வேண்டும். அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இதை தயாரிக்க ஒரு பானையின் அடியில் தண்ணீர் வடிய நான்கு துளைகள் போட்டுக் கொள்ளுங்கள். அந்த துளைகளில் இருந்து வழியும் தண்ணீர் வீணாகாமல் இருக்க அதற்கு கீழே ஒரு தட்டு வைத்து இந்த பானையை அதன் மேல் வைத்து விடுங்கள். இதில் முதலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு மண் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது மண்புழு உரம் இரண்டில் எது உங்களிடம் இருக்கிறதோ அதை முதல் உரமாக போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து கிச்சன் கழிவு ஒரு அடுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் சமைத்த பிறகு இருக்கும் எந்த பொருளையும் சேர்க்கக் கூடாது. இதற்கு மேல் மறுபடியும் ஒரு அடுக்கு மணல் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காய்ந்த இலை தழைகளை சேர்த்து கற்றாழையை ஐந்தாறு மடல் எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதையும் இதன் மேல் போட்டு பரப்பி விடுங்கள். கடைசியாக காய்ந்த இலை தழைகளை இதன் மேல் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ந்த இலை தழைகள் கிடைக்காதவர்கள் மரத்தூள் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இவை அனைத்தையும் லேயர், லேயராக சேர்த்த பிறகு கடைசியாக தண்ணீர் ஊற்றி விடுங்கள். ஊற்றும் தண்ணீர் தங்காமல் அடியில் வடிய வேண்டும் அதை சரியாக பார்த்து ஊற்றி விடுங்கள். இதற்கு இடையே தண்ணீர் இல்லாமல் இருந்தால் பானையில் வடிந்து இருக்கும் தண்ணீர் லேசாக தெளித்து விடலாம். இந்த உரம் சீக்கிரம் தயாராக புளித்த மோரில் கொஞ்சம் நாட்டு சக்கரை கலந்து அதையும் ஊற்றி விடுங்கள்.

இந்த உரம் கலந்த பானையை நேரடியாக வெயில் வைக்காமல், வெயிலின் நிழல் படும் இடத்தில் வைத்தால் சீக்கிரம் இவை யெல்லாம் மக்கி உதிரி உதிரியாக மண் போல உரம் தயாராகி விடும். இந்த முறையில் தயாரித்த இந்த உரத்தை எந்த செடிகளுக்கு போட்டாலும் செடிகள் நன்றாக தழைத்து வளரும். இப்படி செய்வதால் கம்போஸ்ட்டு தயாரிக்கும் போது ஏற்படுவதை போல் அதிக வாடை கூட இருக்காது.

இதையும் படிக்கலாமே: இனி வரும் வெயில் காலத்தில் உங்கள் செம்பருத்தி செடி தாறுமாறாக பூக்க, இப்பவே இத கொடுத்துடுங்க அப்புறம் பாருங்க செடியே தெரியாத அளவுக்கு பூக்கள் பூத்துக் குலுங்கும்.

பொதுவாகவே செடிகள் நன்றாக வளர கற்றாழை பெரிதும் உதவி செய்யும். எந்த ஒரு செடியும் நடும் போது அதன் அடி பகுதியில் கொஞ்சம் கற்றாழை ஜெல்லை தடவி வைத்தால், செடி நன்றாக வேர்ப் பிடித்து வளர ஆரம்பிக்கும். இந்த கற்றாழை கம்போஸ்ட் தயாரித்து ரோஜா செடிகளுக்கு உரமாக கொடுக்கும் போது அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். நீங்களும் இந்த முறையில் உரம் தயாரித்து உங்க ரோஜா செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள். செடிகள் வீணாக்காமல் நன்றாக வளரும்.

- Advertisement -