விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரிகளை ஓட ஓட விரட்ட ஒன்பது சனிக்கிழமை அம்மனை இப்படி வழிபாடு செய்தாலே போதும். எதிரிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

amman archanai
- Advertisement -

இப்போதெல்லாம் நண்பர்கள் யார் எதிரிகள் யார்? என்று கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. நம்முடனே பழகிக் கொண்டே நமக்கே குழிப்பறித்து தள்ளி விடுபவர்களின் மத்தியில் தான் நாம் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகையால் மற்றவரை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை விட, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது தான் இதற்கு சிறந்த வழி. என்ன தான் கவனமாக இருந்தாலும் கூட எங்கேயோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு எதிரி முளைத்து கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியான பிரச்சனைகளிலிருந்து வெளி வருவதற்கான எளிய வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

எதிரிகள் என்றால் பெரிய அளவில் நமக்கு தொல்லை தருபவர்கள் மட்டும் கிடையாது. நம் உடனே இருந்து கொண்டே சின்ன சின்ன வகையில் நமக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அதுவும் ஒரு வகையில் நம்முடைய முன்னேற்றை தடுக்கும். குறிப்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாம் என்ன செய்தாலும் அதில் ஒரு குறை கண்டுபிடித்து சண்டைக்கு வருவார்கள். அதே போல் வேலை செய்யும் இடத்தில் நம் சக பணியாளர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ இது போல தொல்லை தந்து கொண்டு இருப்பார்கள். இப்படி எந்த வகையில் யார் மூலம் நமக்கு தொல்லை வந்தாலும் இந்த பரிகாரம் அந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை வெளிக் கொண்டு வந்து விடும்.

- Advertisement -

எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகார முறையில் முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டியது விரதம் தான். இந்த விரதத்தை முழு நாளும் அனுஷ்டிக்க வேண்டும். விரதம் இருக்க முடிந்தவர்கள் எதுவும் உண்ணாமல் உண்ணா விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. ஒரு வேளை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவு உப்பு, காரம் சேர்க்காமல் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம்.

இந்த பரிகாரம் செய்யும் சனிக்கிழமை நாள் அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு விரதத்தை தொடங்கி விடுங்கள். அன்றைய நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து மாலையில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்திற்கு உங்களால் முடிந்த ஒரு நெய்வேத்தியத்தை செய்து கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

அதே போல் அம்மனுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் என அர்ச்சனைக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு இத்துடன் சம்பங்கி மாலையும் சேர்த்து வாங்கி கொள்ளுங்கள். ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து மாலை அணிவித்து நீங்கள் கொண்டு சென்றிருக்கும் நெய்வேதியத்தை அம்மனுக்கு படைத்து ஆலயத்தில் வருபவருக்கு தானமாக கொடுங்கள். இதை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் சிறிய எதிரி முதல் பெரிய துரோகி வரை அனைவரும் உங்களை விட்டு விலகி சென்று விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: இந்தப் பிள்ளையாரை கொண்டு வந்து வீட்டில் வச்சுட்டீங்கன்னா போதும். சண்டை சச்சரவே வராது. சண்டைக்கு மூல காரணமாக இருக்கும் அந்த ஒரு விஷயமும் உங்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடும்.

இந்த பரிகாரத்தை செய்வதோடு உங்களை சுற்றி இருக்கும் நபர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்டு நீங்கள் தெளிவான சிந்தனையுடன் பழகுவதே பல பிரச்சனைகளில் இருந்து உங்களை வெளிக் கொண்டு வரும். எந்த ஒரு எதிரியும் அழிக்க நினைக்காமல் அவர்களை தரும் தொல்லையிலிருந்து நாம் விலகி நம்முடைய முன்னேற்றத்தில் கவனத்தை செலுத்துவது தான் புத்திசாலித்தனம். அத்துடன் இது போன்றதொரு எளிமையான பரிகாரத்தையும் செய்து நம்முடைய வாழ்க்கை பயணத்தை தெளிவான முறையில் நகர்த்தி செல்லலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -