3.3.2024 தேய்பிறை அஷ்டமி, எதிரி தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு

sivan
- Advertisement -

இந்த உலகத்துக்கே காவல் தெய்வமாக நின்று காத்து ரட்சிப்பவர் பைரவர். இவரை தினமும் நாமும் மனதில் நினைத்து வழிபாடு செய்தால், நமக்கும் இவர்தான் காவல் தெய்வம். நமக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளிலிருந்து தப்பிக்க, கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க, ஏவல் பில்லி சூனியம் போன்ற செய்வினை பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவும், பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும்.

நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி திதி. பைரவருக்கு ரொம்ப ரொம்ப உகந்த நாள். இந்த நாளில் பைரவரை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்தாலே போதும். பைரவர் உங்க கூடவே உங்களுக்கு காவல் தெய்வமா உங்க வீட்டிலேயே இருப்பார். காலத்துக்கும் நமக்கு பாதுகாப்பு தரக்கூடிய அந்த பைரவர் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

எதிரி தொல்லை விலக, தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு

இந்த எலுமிச்சம் பழத்துக்கு தேவலோக கனி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. அதீத சக்தி வாய்ந்த கனி இது. இந்த கனியை நம் கையில் வைத்துக் கொண்டு என்ன நினைக்கிறோமோ, அதை நடத்தி தரக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு என்று சொல்லுவார்கள். நாளைய தினம் வைரவர் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக, புதுசாக 1 எலுமிச்சம் பழம் வாங்கிக்கோங்க.

பேரம் பேசக்கூடாது. எலுமிச்சம் பழத்தில் கரும்புள்ளிகள் எதுவும் இருக்கக்கூடாது. கடைகளில் கூடையில் வைத்து எலுமிச்சம் பழம் விப்பாங்க. உங்க கையைக் கொண்டு ஒரு நல்ல பழமாக எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கிய பழத்தை தண்ணீரில் கழுவி நேராக அப்படியே கோவிலுக்கு கொண்டு போயிருங்க. இந்த பழத்தை உங்கள் உள்ளங்கையிலேயே வச்சுக்கோங்க.

- Advertisement -

நாளை மாலை நேரத்தில் எல்லா பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் பைரவர் சன்னிதானத்தில் விசேஷ அபிஷேக பூஜை ஆராதனைகள் நடக்கும். அந்த சமயத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை பைரவரிடம் சொல்லுங்கள்.

தொழிலில் எதிரி தொல்லை இருக்குதா, வீட்டில் அக்கம் பக்கத்தில் எதிரிகள் தொல்லை இருக்குதா, உங்களை வாழ விடாமல் சில பேர் வாழ்க்கையில் தொல்லை கொடுக்கிறார்களா, அல்லது சொந்த பந்தங்களே எதிரியாக மாறி பிரச்சனை செய்கிறார்களா, அல்லது யாராவது ஒருவர் உங்கள் மீதோ, உங்கள் குடும்பத்தின் மீதோ எதிர்மறை ஆற்றலை ஏவி விட பார்க்கிறார்களா, அல்லது உங்கள் மீது அதிக கண்திருஷ்டி படுகிறதா எந்த பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருக்கிறதோ, அதிலிருந்து ஒரு பிரச்சனையை மட்டும் பைரவரிடம் சொல்லுங்கள்.

- Advertisement -

கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை அந்த பைரவர் கோவிலில் இருக்கும் அர்ச்சகர் இடம் கொடுத்து பைரவரின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, அந்த எலுமிச்சம் பழத்தை திரும்பவும் வாங்கிக்கோங்க. நேரா வீட்டுக்கு வந்து, இதை உங்க வீட்டு பூஜை அறையிலோ அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்து விட்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும்.

கடையில் வியாபாரம் நடக்கவில்லை கண் திருஷ்டி தொல்லை என்றால் இதை கடையில் வைக்கலாம். இந்த எலுமிச்சம் பழம் உங்க வீட்டு பூஜை அறையிலேயே அடுத்த ஒரு மாதம் வரை இருக்கலாம். அடுத்த தேய்பிறை அஷ்டமி திதி வரும்போது இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புது பழத்தை கோவிலில் வைத்து, வாங்கி கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கலாம்.

ஒரு வேலை இந்த பழத்தை பூஜை அறையில் வைத்த ஓரிரு நாட்களில் அழுகிவிட்டது எனும் பட்சத்தில் அந்த பழத்தை உடனடியாக கொண்டு போய் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். எலுமிச்சம்பழம் காய்ந்த பிறகு பூஜையறையில் இருக்கலாம். அதுவும் 48 நாள் தான் ஒரு சாமி பழம் பூஜை அறையில் இருக்கணும். அதற்கு மேல் அதற்கு பவர் இருக்காது.

இதையும் படிக்கலாமே: 3.3.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஆனால் அழகிய பழம் ஒரு நாள் கூட நம் வீட்டில் இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -