இந்த விளக்கை ஏற்றி, இந்த பெண் தெய்வத்தை ஒரு நாள் வழிபட்டால் போதும். ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய எதிரியை வெல்லலாம்.

- Advertisement -

கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிரி, தொழிலில் போட்டி போடும் எதிரி, அக்கம்பக்கம் வீட்டில் இருக்கக்கூடிய எதிரிகள், முதுகில் குத்த கூடிய எதிரிகள், துரோகம் செய்யக்கூடிய எதிரிகள், கூடவே இருந்து குழி பறிக்கக் கூடிய எதிரிகள், என்று எதிரியின் பட்டியலை நீண்ட தூரம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். எதிரிகள் இல்லாத வாழ்க்கை என்பது சுவாரஸ்யமாக இருக்காது. எதிரிகளை போட்டியிட்டு வெல்வதில்தான் வாழ்க்கையே அடங்கியுள்ளது. எதிரிகளைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பின்வாங்க வேண்டாம். எதிரி என்று வந்துவிட்டால் அவர்களை எதிர்த்து போராட தொடங்குங்கள். எதிரி அடங்கி செல்வான். இதுதான் முதல் வழி.

இதைத் தவிர்த்து சமாளிக்கவே முடியாத எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருக்க, ஒரு சிறு பரிகாரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்து, இந்த ஒரு பெண் தெய்வத்தினை, ஒரே ஒரு முறை வேண்டிக் கொண்டாலே போதும். எதிரி தலை தெறிக்க ஓடிவிடுவான்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கொப்பரை தேங்காய் தேவை. ஒரு தாம்பூல தட்டில் கொஞ்சமாக பச்சரிசியை பரப்பி, அதன் மேலே தேங்காய் கீழே விழாமல் நிற்க வைத்து விடுங்கள். இரண்டாக வெட்டிய கொப்பரை தேங்காயில் இரண்டு பாகத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். தேங்காயை இரண்டாக வெட்டி அதில் நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிற திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்போது, நாம் ஜேஷ்டா தேவியை நினைத்துக் கொள்ள வேண்டும். ஜேயஷ்டா தேவி என்றால் இன்று நம்மில் நிறைய பேருக்கு அடையாளம் தெரியாது. மூத்த தேவி என்று சொல்லப்படுகின்ற மூதேவியை தான் ஜேஷ்ட்டா தேவி என்று சொல்லுவார்கள். ஜேஷ்டா தேவியின் திருவுருவப்படம் கட்டாயம் யார் வீட்டிலும் இருக்காது. அவர்களை வைத்து வழிபாடு செய்யவும் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஜேஷ்டா தேவிக்கு என்று வழிபாடுகளும் கோவில்களும் இருக்கிறது. காலப்போக்கில் இந்த ஜேஷ்ட்டா தேவி வழிபாடு மறைக்கப்பட்டது என்பது ஒரு வகையான உண்மை. சரி அது போகட்டும்.

- Advertisement -

ஜேஷ்டா தேவியை வணங்கி இந்த தீபத்தை ஏற்றி, எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுடைய எதிரி அடுத்த நாள், உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டான் என்பது உறுதி. பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஜேஷ்டா தேவியின் திருவுருவப்படம் இல்லையே என்ன செய்வது. ஜேஷ்டா தேவியின் வாகனம் தான் கழுதை. கழுதையின் திருவுருவப்படம் இருந்தாலும், அந்த படத்தின் முன்பு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம்.

வீட்டிலேயே இந்த தீபம் ஏற்றி ஜேஷ்டா தேவியை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த வழிபாடு செய்தால் மூதேவி வந்து நம்மை தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம் எல்லாம் தேவையில்லை. வேண்டிய வரங்களை கொடுக்கக்கூடிய சக்தியை கொண்ட தாய் தான் இவள். காலப்போக்கில் வந்தவர்கள் மூத்த தேவி என்ற பெயரை மூதேவியாக மாற்றி பலவிதமான எதிர்மறையான விஷயங்களை பரப்பி விட்டு விட்டார்கள்.

உதாரணத்திற்கு கழுதை படத்தில் என்னை பார் யோகம் வரும் என்று எழுதி இருக்கும். நிறைய பேர் வீட்டில் இதை நாம் பார்த்து இருப்போம். கழுதை படத்தை பார்க்கும்போது நமக்கு யோகம்தான் கிடைக்கும். அந்த கழுதையை வாகனமாக வைத்திருக்கக் கூடிய ஜேஷ்டா தேவி வழிபாடு எதிரி தொல்லையை அழிக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள். மேல் சொன்ன பரிகாரம் உங்களுக்கு நிச்சயமாக கைமேல் பலனை கொடுக்கும். தலைவலி கொடுக்கக்கூடிய எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க இது ஒரு சுலபமான வழிபாடு.

- Advertisement -