முகம் மற்றும் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க ஃபேஸ் பேக்

glowing skin
- Advertisement -

எந்தவித மாசு மருவும் இல்லாமல் மிருதுவான பளபளப்பான தன்மை கொண்டது தான் குழந்தைகளின் சருமம். அந்த குழந்தைகளின் சருமத்தை போலவே நம்முடைய சருமமும் திகழ வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கிறது. இதற்காக பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை விட நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தும் போது அதன் பலனை நம்மால் உடனடியாக உணர முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் உடனடி பொலிவையும் மிருதுவான மேனியையும் பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

மிருதுவான மேனியையும், உடனடி பளபளப்பையும் தரக்கூடிய பொருட்கள் என்று நாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவோம். இதனால் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுகின்றன. மேலும் இந்த கெமிக்கல் நிறைந்த பொருட்களை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தும் பொழுது பலவிதமான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவை அனைத்தையும் தவிர்த்து விட்டு இயற்கையிலேயே சருமப் பொழிவை பெறுவதற்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு முதலில் வெந்தயத்தை எடுத்து லேசாக கடாயில் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். அதன் மணம் லேசாக வந்தவுடன் இந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான பொழுதெல்லாம் அதை எடுத்து உபயோகப்படுத்தலாம்.

இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடி சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து பேஸ்ட் ஆக தயாராகும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். தடவி 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு லேசாக தண்ணீர் தெளித்து முகத்தை வட்ட வடிவிலும் கழுத்தையும் மேல் நோக்கியும் நன்றாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும். மிருதுவான சருமம் உண்டாகும். மேலும் இறந்த செல்களோடு அழுக்குகளும் நீக்கப்படுவதால் முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். மேலும் பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ இருப்பதால் முகத்தின் நிறத்தை அதிகரித்து காட்டவும் உதவுகிறது. இதனால் கழுத்தில் இருக்கக்கூடிய கருமையும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கட்டுக்கடங்காத முடி வளர ஹேர் மாஸ்க்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் உபயோகப்படுத்தும் இந்த பொருட்களை பயன்படுத்தியே நம்முடைய மேனியை இளமையுடனும், பொலிவுடன், மிருதுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -