பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, 30 வயதை கடக்கும் போது உடம்பில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது போல தோன்றும். அதாவது இடுப்பு வலி, முட்டி வலி, கை கால் வலி, இதெல்லாம் 30 வயதிலேயே வந்துவிடுகிறது. இதோடு சேர்ந்து முடி கொட்டும் பிரச்சனையும் 30 வயதிலேயே தொடங்கி விடுகிறது. சில பேருக்கு நரைமுடி கூட 30 வயதிலேயே வந்துவிடும். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை உள்ளதா. முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்ட இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணலாம். 30 வயதை தாண்டியும் ஆசைப்பட்டபடி முடி வளர்க்க முடியுமா என்ற சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம். இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடி உதிர்வதை தடுத்து நிறுத்தி அழகாக முடியை வளர்க்கச் செய்யும் ஹேர் பேக்
30 வயதை தாண்டியும் முடியை அழகாக வளர்க்க குறிப்பு:
இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு வெந்தய பவுடர், ஆலுவேரா ஜெல், விட்டமின் இ கேப்ஸ்யூல். இந்த மூன்று பொருட்கள் தேவை. இந்த பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் தயார் செய்து வைத்துக் கொண்டால், பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் நன்றாக இருக்கும். கெட்டுப் போகாது.
வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும். கொரகொரப்பாக இருக்கக் கூடாது. அல்லது வெந்தய பவுடரே உங்களுக்கு நைசாக கிடைத்தாலும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அதில் எந்த கலப்படமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பௌலில் 2 ஸ்பூன் வெந்தய பவுடர் போட்டு, தேவையான அளவு அலோவேரா ஜெல்லை ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.
ஒரு பேக் கிடைத்திருக்கும். அதில் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல் சேர்க்கவும். 1 விட்டமின் இ கேப்ஸ்யூல் பயன்படுத்தினால் போதும். 2 டேபிள் ஸ்பூன் வெந்தய பவுடருக்கு, 1 டேப்லெட் சரியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக இந்த பேக்கை நீங்கள் தயார் செய்தால், இன்னும் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Evion டேப்லெட் என்று மெடிக்கல் ஷாப்பில் கேட்டாலே கொடுப்பார்கள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை உங்களுடைய ஸ்கேல்பில் படும்படி போடவும். பிறகு முடியின் நுனி வரை போட்டாலும் தவறு கிடையாது. 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். ஸ்கேல்பில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்து, முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக முடியை வளர செய்யக் கூடிய வேலையை இந்த மூன்று பொருட்களுமே செய்யும்.
இதையும் படிக்கலாமே: முடியில் இருக்கும் வெடிப்பு நிரந்தரமாக போக சூப்பரான ஐடியா இது. பார்க்கவே ரொம்பவும் டிரை ஆக, வெடிப்பாக இருக்கும் முடியை வெறும் 15 நாட்களில் சரி செய்யலாம்.
தேவைப்படுபவர்கள் அழகு குறிப்பு வாரத்தில் இரண்டு நாள் என்று முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம். அதேபோல இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். 30 வயதை கடக்கும் போது தான் உங்களுடைய டயட்டில் அக்கறை கொள்ள வேண்டும். ஏதோ ஒன்று சாப்பிட்டோம் என்று இருக்காமல், தினமும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருளை உணவோடு சேர்த்து வருவதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் வராது. மூட்டு வலி கை கால் வலி இடுப்பு வலியில் இருந்து கூட தப்பித்துக் கொள்ளலாம்.