- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடியில் இருக்கும் வெடிப்பு நிரந்தரமாக போக சூப்பரான ஐடியா இது. பார்க்கவே ரொம்பவும் டிரை ஆக,...

முடியில் இருக்கும் வெடிப்பு நிரந்தரமாக போக சூப்பரான ஐடியா இது. பார்க்கவே ரொம்பவும் டிரை ஆக, வெடிப்பாக இருக்கும் முடியை வெறும் 15 நாட்களில் சரி செய்யலாம்.

- Advertisement -

நிறைய பேருக்கு முடி வளராமல் இருப்பதற்கு காரணம், இந்த வெடிப்பு தான். தலை முடி கீழே நுனியில் தான் வெடிக்கும் என்று சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. முடிக்கு மேல் பக்கத்திலும் சின்ன சின்ன வெடிப்பு இருக்கும் சில பேருக்கு. அதை நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள். ரொம்பவும் டிரை ஆக இருக்கக்கூடிய முடி தான் வெடித்துப் போகும். ஆங்கிலத்தில் இதை hair split ends என்று சொல்லுவார்கள் அல்லவா. இதை சரி செய்ய நம் வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

தலைமுடி வெடிப்பை சரி செய்ய அழகு குறிப்பு:
தலைமுடியில் வெடிப்பை வைத்துக்கொண்டு, என்னதான் ரெமிடியை ட்ரை பண்ணாலும், அது வேலை செய்யாது. முதலில் வெடிப்பாக இருக்கும் முடியை வெட்டத்தான் வேண்டும். முடியின் நுனியில் வெடிப்பு இருந்தால் அதை வெட்டி விடுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் நெய், விளக்கெண்ணெய் 1 ஸ்பூன், ஆலோவேரா ஜெல் 2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்கள் முடியின் அளவுக்கு ஏற்ப இந்த பொருட்களை கூட்டவோ குறைத்தோ செய்து கொள்ளலாம்.

- Advertisement -

நெய் கட்டியாக இருந்தால் அதை உருக்கி வெதுவெதுப்பாக ஊற்றிக் கொள்ளுங்கள். மூன்று பொருட்களையும் கலந்தால் ஒரு ஜெல் நமக்கு கிடைத்திருக்கும் அல்லவா. அதை எடுத்து உங்களுடைய தலைமுடியில் தடவ வேண்டும். இதை ஸ்கால்ப்பில் தடவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முடிக்கு கீழ் பக்கத்தில் தான் வெடிப்பு இருக்கும். அதனால் நீளமாக இருக்கும் முடியில் எல்லா இடத்திலும் படும்படி முடியை பிரித்து பிரித்து தடவி விடுங்கள்.

1/2 மணி நேரம் கழித்து ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டாலே உங்களுக்குத் தெரியும். முடியில் ஈரத்தன்மை தங்கி இருக்கும். வாரத்தில் மூன்று நாள் இதே போல தொடர்ந்து செய்து வர வேண்டும் இப்படி செய்தால் ஒரு மாதத்தில் முடிவெடுப்பில் நல்ல வித்தியாசம் தெரியும். இது ஒரு குறிப்பு.

- Advertisement -

இது அல்லாமல் நீங்கள் இன்னொரு மெத்தடையும் ட்ரை பண்ணலாம். சுத்தமான தேன் 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் அடித்து கலந்து இதை கூட தலையில் அப்ளை செய்து, அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் உங்களுடைய முடி ஈரத்தன்மையோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெடிப்பு வராமல் இருக்கும். தேனை தடவினால் முடி வெள்ளை ஆகி விடுமோ என்று பயப்படாதீங்க. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. உங்களுக்கு இந்த இரண்டு அழகு குறிப்பு பிடித்திருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: காஃபி பவுடர் காபி போட மட்டும் இல்லை முகம் வெள்ளை வெளேரென வெள்ளைக்காரங்க மாதிரியும் மாற்றுமாம் தெரியுமா?

இதோடு சேர்த்து நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். விட்டமின் சி சத்து நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிடணும். நீச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சாப்பிடணும். கீரை வகைகளை சாப்பிடணும். நிறைய தண்ணீர் குடிக்கணும். நம்முடைய தோல் வறட்ச்சி ஆகாமல் இருந்தால் தான் நம்முடைய முடியும் வறட்சியாகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்