தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த இயற்கை உரத்தை அதிக செலவில்லாமல் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். நீங்கள் வளர்க்கும் ஒரு செடி கூட இனி வாடி வதாங்காது.

- Advertisement -

தோட்டம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நிச்சயம் அதற்கான பராமரிப்பு முறைகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் செடிகளுக்கு கொடுக்க வேண்டிய பூச்சிகள் கொல்லிகள், பயிர் ஊக்கி போன்றவற்றை பற்றியும் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு முக்கியமான பயிர்ஊக்கி தான் இந்த மீன் அமினோ அமிலம். இதை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மீன் அமீனோ அமிலம் என்பது இப்போது புதிதாக வந்த ஒரு பயிர்ஊக்கி கிடையாது. இதை இயற்கை விவசாயம் செய்பவர்கள் அனைவரும் காலம் காலமாக கடைப்பிடித்து வந்த ஒரு அற்புதமான பயிர் ஊக்கி தான். இதில் மீன்களில் உள்ள நுண்ணுயிரிகள் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிக்கப்படுகிறது. அதில் செடிகளுக்கு தேவையான நைட்ரஜன் சத்து அதாவது தழைச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதைச் செடிகளுக்கு உரமாக நாம் கொடுத்து வரும் போது செடிகள் நல்ல முறையில் வளருவதுடன் இலைகள் பசுமை மாறாமல் , பெரிய பூக்களும், காய்கறிகளும் நன்றாக கிடைக்கும்.

- Advertisement -

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை:
இந்த அமிலம் தயாரிக்க மீன் சுத்தம் செய்த பிறகு தேவை இல்லை என ஒதுக்கி தூக்கி போடும் கழிவுகளை மட்டும் இருந்தாலே போதும். அதை எந்த அளவிற்கு எடுக்கிறோமோ அதே அளவிற்கு பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றுடன் கனிந்த வாழைப் பழம் ஒன்று.

இதற்கு காற்று புகாத ஒரு பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல அந்த பாட்டில் முழுவதும் நாம் எடுத்து வைத்திருக்கும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக குலுக்கி 40 நாட்கள் வரை வெயில் படாமல் அப்படியே வைக்க வேண்டும். இடையிடையே பாட்டிலை திறந்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

- Advertisement -

40 நாட்கள் கழித்து இது தேன் போன்ற திரவமாக மாறி இருக்கும். அத்துடன் இந்த மீன் கழிவுகளும் சக்கை போன்று இருக்கும். அது அப்படியே அதில் இருக்கட்டும் இதை தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்ள இதில் இருந்து கனிந்த பழத்தின் வாடை வரும். அப்படி வந்து விட்டால் இந்த மீன் அமினோ அமிலம் தயாராகி விட்டது என்று அர்த்தம். இந்த தேன் போன்ற திரவத்தை ஒரு லிட்டர் தண்ணிக்கு 10 மில்லி மட்டும் கலந்து இதை செடிகளின் வேர்பகுதியில் ஊற்ற வேண்டும்.

ஒரு முறை இதை தயார் செய்து வைத்துக் கொண்டால் நான்கு மாதம் வரை கூட வைத்து பயன்படுத்தலாம். இதை தினமும் செடிகளுக்கு ஊற்ற கூடாது. வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் கொடுத்தால் கூட போதும். ஏனென்றால் இதை அதிக அளவில் செடிகளுக்கு கொடுத்து விட்டாலும் செடிகளின் வேர்கள் பாதித்து செடி பட்டு போகும் வாய்ப்பும் அதிகம். எனவே குறிப்பிட்ட அளவில் மட்டும் கலந்து செடிகளுக்கு கொடுத்தால் போதுமானது.

- Advertisement -

நாம் வேண்டாம் என தூக்கி போடும் இந்த கழிவுகளில் இருந்து இப்படி ஒரு அருமையான இயற்கை பயிர்ஊக்கியை நம்மால் தயாரிக்க முடியும். உங்களுக்கு மீன் கழிவு கிடைக்க வில்லை என்றால் முழு மீனையும் கூட பயன் படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: இனி வரும் வெயில் காலத்தில் உங்க ரோஜா செடி வாடாம இருக்கணும்னா இதை மட்டும் மறக்காமல் செஞ்சுருங்க. அப்புறம் பாருங்க வெயில் காலத்துல கூட செடி பச்சை பசேல்னு பூத்து குலுங்கும்.

மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்த ஒரு உரம் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதன் மூலம் செடிகளின் நல்ல வளர்ச்சியும் பலனையும் பெறலாம். இந்த பதிவில் உள்ள இயற்கை பயிர்ஊக்கி தயாரிப்பு குறித்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

- Advertisement -