இனி வரும் வெயில் காலத்தில் உங்க ரோஜா செடி வாடாம இருக்கணும்னா இதை மட்டும் மறக்காமல் செஞ்சுருங்க. அப்புறம் பாருங்க வெயில் காலத்துல கூட செடி பச்சை பசேல்னு பூத்து குலுங்கும்.

rose plant maintance
- Advertisement -

இந்த ரோஜா செடி பராமரிப்பு என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாறும். இதை மழைக் காலத்தில் ஒருவகையாக பராமரிப்போம் என்றால் வெயில் காலத்தில் அதன் பராமரிப்பு கொஞ்சம் மாறுபடும். இதை சரியாக செய்து வந்தோம் என்றாலே செடிகள் எல்லா காலத்திலும் நன்றாக தளிர்கள் விட்டு பூத்து குலுங்கும். இப்போது இந்த வீட்டுத் தோட்டம் பதிவில் வெயில் காலத்தில் ரோஜா செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முதலில் ரோஜா செடிக்கு வெயில் காலத்தில் தண்ணீர் எப்படி ஊற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மழைக் காலத்தில் செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருக்காது எப்போதும் ஈரப்பதம் இருக்கும். ஆனால் வெயில் காலத்தில் கட்டாயமாக இரண்டு வேலையும் தண்ணீர் ஊற்ற வேண்டும் அது காலை வெயில் வருவதற்கு முன்பு, மாலை வெயில் தணிந்த பிறகு இந்த இரண்டு நேரமும் கட்டாயமாக தண்ணீர் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

வெயில் காலத்தில் தண்ணீரை மதிய நேரத்தில் ஊற்றி விடக் கூடாது. ஏனென்றால் வெப்பத்தின் காரணமாக மண் மிக சூடாக இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் தண்ணீர் ஊற்றி விட்டால், அந்த வெப்பம் வேர்களில் தாக்கி செடி இறந்து விடும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதே போல் வெயில் காலத்தில் தண்ணீர் தெளிக்கும் பொழுது முடிந்த அளவுக்கு செடிகளின் மேல் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் மாலையில் தண்ணீர் ஊற்றும் போது கட்டாயமாக செடிகளின் மீது தெளிக்க கூடாது. ஏனெனில் வெயிலில் செடிகள் எல்லாம் நன்கு சூடாக இருக்கும். தண்ணீர் தெளிக்கும் போது சில நேரங்களில் செடிகள் உடனே வெப்பத்தினால் கருகி விடும் வாய்ப்பு அதிகம். செடிகளின் மேல் தெளிப்பது என்றால் காலை நேரத்தில் தண்ணீர் ஊற்றும் போது தெளிக்கலாம்.

அதே போல் வெயில் காலத்தில் செடிகளை கவாத்து பண்ணக் கூடாது. அதாவது வெட்டி விடுவது. மழைக் காலங்களில் செடிகளை வெட்டி விட்டால் உடனடியாக புதிய தளர்கள் வைத்து விடும். வெயில் காலத்தில் செடிகள் தழைத்து வளர கொஞ்ச காலம் பிடிக்கும். ஆகவே வெயில் காலத்தில் இது போன்றவற்றை செய்யாமல் பூக்கள் பூத்தவுடன் அதிலிருந்து ஒரு இலை மட்டும் நறுக்கி விட்டால் போதும். வேறு எந்த பராமரிப்பையும் வெயில் காலத்தில் செய்யாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

அதே போல் வெயில் காலங்களில் தண்ணீர் ஊற்றுவதாக இருந்தாலும் சரி, உரம் போடுவதாக இருந்தாலும் சரி வேரை ஒட்டி போடாமல் வேறு விட்டு கொஞ்சம் தள்ளி மணலை தோண்டி உரம் போட்டு அதன் பிறகு தண்ணீர் ஊற்றுவது நல்லது. இது செடி வளரவும் அதிகமாக உதவி செய்யும்.

மழைக் காலத்தில் தான் இந்த பூச்சி தாக்குதல், இலை சுருட்டல் நோய்கள் தாக்கும். வெயில் காலத்தில் இந்த தொந்தரவுகள் பெருமளவு இருக்காது. எனவே வெயில் காலத்தில் இந்த பூச்சி மருந்து தெளிப்பது போன்றவற்றை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

வெயில் காலங்களில் ரோஜா செடி மேலே மணல் பரப்பி விடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் வெயில் ஆனது நேரடியாக மண்ணில் பட்டு சீக்கிரம் மண் காய்ந்து விடும் வாய்ப்பு அதிகம். இந்த செடியை வைத்திருக்கும் இடம் தரை தொட்டி எதுவாக இருந்தாலும் அதன் மேல் கொஞ்சம் மணலை பரப்பி தண்ணீர் ஊற்றும் போது அது ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும். அதே நேரத்தில் வெப்பமானது நேரடியாக செடியை தாக்காமல் இருக்கும். இதற்கு மணல் இல்லை என்றால் தேங்காய் நார் உரத்தையும் பயன்படுத்தலாம் இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் சின்ன சின்ன கற்களை மேலே போட்டு விடலாம்.

அதே நேரத்தில் செடியை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது போன்றவற்றையெல்லாம் வெயில் காலத்தில் செய்யாமல் இருப்பது நல்லது. மழைக் காலங்களில் இதை செய்யும் போது சீக்கிரத்தில் வேர் பிடித்து வளர்ந்து விடும். வெயில் காலத்தில் இதை செய்யும் பொழுது செடிகள் பட்டு விடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இதையும் படிக்கலாமே: உங்க தோட்டத்தில் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் செடிகளில் வரக்கூடிய புழுக்களை வீட்டிலேயே எளிதாக எப்படி ஒழித்துக் கட்டுவது?

வெயில் காலத்தில் நீங்கள் புதிதாக ரோஜா செடி வாங்கி வைக்க விரும்புகிறீர்கள் என்றால் அப்போது தொட்டி தரை எதில் வைத்தாலும் ரோஜா செடியுடன் இருக்கும் மண்ணை எதையும் செய்யாமல் சுற்றிலும் மண்ணில் உரம் எல்லாம் சேர்த்து இதை அந்த மண்ணுடன் அப்படியே வைத்து மூடி விடும் போது செடிகள் பட்டுப்போகாமல் வளர அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சின்ன சின்ன தகவல்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டோமே ஆனால் வரும் வெயில் காலத்தில் நம் வளர்க்கும் ரோஜா செடிகள் பட்டுப்போகாமல் பாதுகாத்து வளர்த்து விடலாம்.

- Advertisement -