Fish names in Tamil and English | மீன் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Fish names in Tamil and English
- Advertisement -

Fish names in Tamil and English: நீர் வாழ் உயிரினமான மீன்களில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. அதன் காரணமாக உலகம் முழுவதும் மீன் சார்ந்த உணவுகளுக்கான தேவை என்பது இருந்து கொண்டே தான் உள்ளது. நாம் மீன் வாங்க மீன் மார்கெட்டிற்கு சென்றோம் என்றால் அங்கு ஏராளமான மீன்கள் கொட்டி கிடைக்கும். ஆனால் அதன் பெயர் நமக்கு தெரிவதில்லை. சிலருக்கு மீன்களின் பெயர் ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் தமிழில் தெரியாமல் இருக்கும். இனி அந்த கவலை வேண்டாம். மீன் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் (Fish names in Tamil and English) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Fish names in tamil and english

மீன் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் - Fish types in Tamil and English

விரால் மீன் Snakehead murrel
பாறை மீன்
Rock fish
கிழங்கான் மீன்
silver whiting
பாசா மீன் Basa
வௌவால் மீன் Pomfret fish
கொடுவா மீன்Barramundi
திருக்கை மீன்Batoidea / Rays
கட்லா மீன் Catla
வஞ்சிரம் மீன்Seer fish
நெத்திலி மீன்Anchovy
காரப்பொடி மீன் Pony fish
கெண்டை மீன்carp
கானாங்கெளுத்தி மீன் Mackerel
காலா மீன் Fourfinger threadfin
சூரை மீன் Tuna
கொடுவா மீன்Barramundi
சுறா மீன் Shark

மேலே உள்ள மீன்கள் அனைத்தும் அதிகம் முள் இல்லாத, சாப்பிடுவதற்கு சுவையான மீன்கள் ஆகும்.

- Advertisement -

Fish names in Tamil and English

Fish Names in TamilFish Names in English
நெத்திலி மீன் Anchovies
சீலா மீன் Barracuda
வங்கரவாசி மீன் Bombay Duck
விரால் மீன் Murrel fish
கெளுத்தி மீன் Catfish
கெண்டை மீன்
Catla
கோழி மீன்Surgeon fish
கொடி மீன் Croaker
கனவா மீன்Cuttle fish
விள மீன் Emperor
சங்கரா மீன்Pinked perch
சீன வாரைFinned bull eye
பறவை கோலாFly fish
கோலா மீன் Gar fish
புல் கெண்டை மீன்Greas carp
களவாய் மீன்Reef cod
பாறை மீன் Trevally fish
கண்ணாடி பாறை மீன் Diamond trevally fish
மொசைக் பாறை மீன் Black banded trevally fish
சுறா மூஞ்சி பாறை மீன் Bluefin trevally fish
கண்டைக்கி பாறை மீன் Big eye trevally fish
அரா பாறை மீன்Giant trevally
வரி பாறை மீன்Gold trevally
வயம் பாறை மீன் Silver trevally
காரப்பொடி மீன் Silver belly moon fish
திருக்கை மீன் Batoidea fish
கண்ணாடி கெண்டை மீன்Rohu fish
வாளை மீன் Ribbon fish
காளா Salmon
நாக்கு மீன் Tongue fish
வௌவால் மீன்Pomfret fish
அம்பட்டன் வாளை மீன்Clown knife fish
கறி மீன்Pearl spot fish
ஊலம்Hilsa fish
கொடுவா மீன்Barramundi
அயிரை மீன்Indian spiny loach
மடவை மீன்Mullet fish
நகரை மீன்Red mullet
கடல் விரால்Cobia
பூங்குழலி மீன்Rainbow runner fish
கிளாத்தி மீன்leather jacket fish
சூரை மீன்Tuna fish
ஓர மீன்Rabbit fish
பச்சை எலி மீன்Parrot fish
கூரை காத்தலைJew fish
உடுவான்Silver biddy
தும்துளிLizard fish
உடுப்பாத்தி மீன்Bar tail flat head
முரல் மீன்Cornet fish
சிங்கி இறால்Lobster
விலாங்கு மீன்Eel
நண்டுCrab
இறால்Prawn
அசல் கொடுவாSea bass
பண்ணா மீன்Cod fish
உளுவை மீன்Saw fish
சாளை மீன்Snail fish
அயிரை மீன்Spined loach
போதா மீன்Halibut
திலாப்பியா மீன்Mozmbique tilapia

நல்ல மீன் வாங்குவது எப்படி

மீன் வாங்க செல்லும் பலருக்கு இருக்கக்கூடிய குழப்பம் என்னவென்றால் நல்ல மீனை வாங்குவது எப்படி என்பது தான். மார்க்கெட்டில் பழைய மீன், புதிய மீன் என இரண்டும் கலந்திருக்கும். அவற்றில் புதிய, நல்ல மீனை கண்டறிவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

Fish types in Tamil and English

மீனின் கண்களை கொண்டே அது பழையதா இல்லை புதியதா என கண்டறிய முடியும். மீனின் கண்கள் நன்கு விரிந்து, கருவிழிகள் பளிச்சென்று தெரிந்தால் அது புதிய மீன். இதற்க்கு மாறாக கண்கள் சுருங்கி கருவிழிகள் மங்கி இருந்தால் அது பழைய மீனம். மீனின் கண்களை கொண்டு அதன் தன்மையை கண்டறிய முடியாதரவர்கள் மீனை அழுத்தி பார்த்து வாங்கலாம். கட்டைவிரலை கொண்டு மீனின் உடம்பை அழுத்தினால் உடனே அழுத்திய இடம் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும். அப்படி வந்தால் தான் அது புதிய மீன், இல்லை என்றால் அது பழைய மீன்.

- Advertisement -

விரால் மீன் – Snakehead murrel (Fish names in Tamil and English)
விரால் மீனை பொறுத்தவரை இதில் அதிகப்படியான முள் இருக்காது. அதே சமயம் இதன் சுவையும் அலாதியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் ஒமேகா – 3 அமிலம் மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது. இந்த மீனை சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.

வௌவால் மீன் – Pomfret fish ((Fish types in Tamil and English))
வௌவால் மீனை பொறுத்தவரையில் இதில் வைட்டமின் பி 12, A, B, D உள்ளது. இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் நமது ஞாபகசக்தி அதிகரிக்கும் அதே சமயம் இதில் கொழுப்பு குறைவாக உள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அவ்வளவு எளிதில் அதிகரிக்காது.

கொடுவா மீன் – Barramundi (Fish names in Tamil and English)
கொடுவா மீனில் பாதரசத்தின் அளவு மிக குறைவாக உள்ளதால் இது உண்பதற்கு ஏற்ற ஒரு மீனாக இருக்கிறது. பொதுவாக பல மீன்கள் மற்ற மீன்களை உண்ணும் தன்மை கொண்டவை. ஆனால் கொடுவா மீனை பொறுத்தவரை இது மற்ற மீன்களை உண்ணாமல் பிளாங்க்டன் எனப்படும் ஒரு நீர் வாழ் உயிரினத்தை உண்டு உயிர் வாழும் தன்மை கொண்டது. அதனால் இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு மீன் வகையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -