திருக்குறள் சிறப்புகள் | Thirukkural sirappugal in Tamil

Thirukkural sirappugal in Tamil
- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள் | Thirukkural special features in Tamil

உலகில் இலக்கிய வளம் கொண்ட ஒரு சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கியங்களும், நூல்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இயற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை உலக மக்களின் வாழ்வை செம்மைப் படுத்துகின்ற கருத்துக்கள் கொண்ட ஒரு மிகச்சிறந்த தமிழ் நூலாக கருதப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய புகழ் பெற்ற நூலான திருக்குறளுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் உள்ளன. அத்தகைய சிறப்புகள் என்ன என்பதை இங்கு நாம் விரிவாக காணலாம்.

Thiruvalluvar

திருக்குறளின் சிறப்புகள் – Thirukkural speciality in Tamil

  1. திருக்குறளில் மொத்தம் உள்ள சொற்கள்-14,000.
  2. தமிழில் மொத்தமுள்ள 247 எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை .
  3. திருக்குறள் நூலில் இரண்டு வகை மரங்கள் மட்டுமே உண்மையாக காட்டப்பட்டுள்ளது. அவை பனை மரம் மற்றும் மூங்கில் மரம்.
  4. திருக்குறளில் எண் 9 மட்டும் எங்கும் பயன்படுத்தவில்லை. அதே சமயம் எண் 7 எட்டு குரல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  5. தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களில் ‘ஒள’ என்கிற எழுத்து மட்டும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
  6. பழ வகைகளில் நெருஞ்சிப்பழம் மட்டுமே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. மலர் வகைகளில் அனிச்சம், குவளை ஆகிய இரு மலர்கள் குறித்து மட்டுமே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  8. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 42,194 ஆகும்.
  9. உலகின் 80 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
  10. இந்திய பழங்குடிகளில் நரிக்குறவர்களின் மொழியான வக்போலி மொழியிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  11. திருக்குறள் முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு புத்தகமாக அச்சிடப்பட்டது.
  12. 1840 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் திருக்குறள் முதன்முதலாக அச்சிடப்பட்டது.
  13. தமிழ் மொழியின் தலை சிறந்த நூலான திருக்குறளில் தமிழ் என்கிற சொல் எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை என்பது அதிசயமாகும்.
  14. திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
  15. திருக்குறளில் பற்று என்கிற சொல் ஒரே குரலில் ஆறு முறை வருகிறது.
  16. திருக்குறளின் மூல நூலை முதன் முதலில் தஞ்சை ஞானப்பிரகாசர் என்பவர் அச்சிட்டார்.
  17. திருக்குறள் நூலில் எழுபது கோடி என்ற சொல் ஓர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  18. கோடி என்கிற சொல் 7 இடங்களில் திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
  19. திருக்குறளில் இருமுறை வருகின்ற ஒரு அதிகாரம் குறிப்பு அறிதல் எனும் அதிகாரமாகும்.
  20. “ளீ” மற்றும் “ங” என்ற எழுத்துக்கள் திருக்குறளில் ஓர் இடத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
  21. “குன்றிமணி” என்கிற விதை மட்டும் தான் திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை
  22. மணக்குடவர் என்பவர் தான் முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
  23. திருக்குறளில் “னி” என்கிற எழுத்து மொத்தம் 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
  24. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி. யு. போப்.
  25. திருக்குறள் நூலை இதுவரை மொத்தம் 40 நபர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.
  26. திருக்குறளில் உள்ள எல்லா குரல்களும் இரண்டு அடிகள் மட்டுமே கொண்டவை. அதே போல எல்லா குரல்களும் முதல் அடி 4 சீர்களும் இரண்டாம் அடி 3 சீர்களும் கொண்டவையாக உள்ளது.
  27. திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை 1330
  28. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை 133.
  29. அனைத்து அதிகாரங்களும் 10 குறள்களை மட்டுமே கொண்டுள்ளது.

திருக்குறள் மொழிபெயர்ப்பு – Thirukkural mozhipeyarpu

திருக்குறள் இந்திய மொழிபெயர்ப்பு

தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி, போஜ்பூரி, வங்காளம், மணிப்பூர், கொங்கணி, குஜராத்தி பஞ்சாபி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ர, ஓடியா ஆகிய 14 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

- Advertisement -

திருக்குறள் ஆசிய மொழிபெயர்ப்பு

சீனம், பர்மிய, அரபி, பிஜி, இந்தோனேஷிய, மலாய், ஜப்பான், கொரிய, சிங்கள, உருது ஆகிய 10 ஆசிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், லத்தீன், ரஷ்யன், பின்னிஷ், நார்வேஜியன், ஸ்வீடிஷ், இத்தாலிய, செக், டச்சு, ஹங்கேரிய, போலிஷ் ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -