பூக்கவே பூக்காத பன்னீர் ரோஜா செடியை பூக்க வைக்க, இந்த உரத்தை கொடுத்தா போதும், அப்புறம் பாருங்க உங்க செடியே தெரியாத அளவுக்கு கொத்து கொத்தா பூ பூக்கும்.

panner rose
- Advertisement -

ரோஜாக்களில் எத்தனை வகைகள் நிறங்கள் இருந்தாலும் பன்னீர் ரோஜா என்பதின் மணம் நிறமும் தனி அழகு தான். இது செடி போல வளராமல் நன்றாக பராமரித்தால் மரம் போலவளர்வதோடு, பூக்களும் கொத்துக் கொத்தாக பூத்து பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இப்படி பூக்கும் பன்னீர் ரோஜா சரியாக போகாமல்போனால் இந்த உரத்தை குடுக்க வேண்டும் என்பதை பற்றிய பதிவு தான்.

பன்னீர் ரோஜாவை பொறுத்த வரையில் தொட்டியில் வைப்பதை விட தரையில் வைப்பதே சிறந்தது. ஏனென்றால் இது நல்ல மரம் போல வளரக்கூடியது தரையில் வைத்து வளர்க்கும் போது இது பெரிதாகவும் வளரும் நிறைய பூக்களும் கொடுக்கும்.

- Advertisement -

இந்த பன்னீர் ரோஜா செடியும் மற்ற செடிகளை போல தான் பூக்கள் வைத்து முடித்தவுடன் கண்டிப்பாக க்ளோனிங் ( பூ பூத்த கிளைகளை கட் பண்ணுவது ) செய்ய வேண்டும். அப்போது தான் பக்க கிளைகள் வந்து பூக்களால் அதிகம் பூக்கும்.

இதற்கு உரம் என்று பார்த்தால் பெரும்பாலும் நம் வீட்டில் இருக்கும் கிச்சன் வேஸ்ட், கம்போஸ்ட் உரம், அதன் பிறகு சாண உரங்களை கொடுத்தால் போதும். தரையில் வைக்கும் போது ஒரு நல்ல பெரிய செடிக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு குடம் தண்ணீராவது ஊற்ற வேண்டும். தொட்டியில் வைத்திருக்கும் செடிகள் என்றால் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றுவது மிக அவசியம். அதே போல நல்ல வெயில் படும்படியான இடத்தில வைக்க வேண்டும். இவையெல்லாம் முறையாக செய்த பிறகும் பூக்காத செடிகளுக்கு இந்த கற்பூர கரைசலை உரமாக கொடுக்கலாம் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் அதற்கு நான்கு கற்பூர வில்லைகள் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு யூகலிப்ட்ஸ் எண்ணெய், அரை டீஸ்பூன் வேப்ப எண்ணெய், அரை டீஸ்பூன் விம் லிக்விட் இவை நான்கையும் நன்றாக கலந்த பிறகு, இதை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். (இத்துடன் அரை ஸ்பூன் மஞ்சளும் கொஞ்சம் கோமியமும் கூட கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம் இதுவும் ஒரு நல்ல பூச்சிக்கொல்லி உரம், விருப்பம் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் இந்த இரண்டையும் தவிர்த்து விடலாம்). தண்ணீரில் கலந்த இந்த கரைசலை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, செடிகளின் இலை முதல் வேர்கள் வரை அனைத்து பக்கமும் படும்படி நன்றாக தெளித்து விடுங்கள்.

இதன் செய்வதின் மூலம் செடிகளில் பூச்சிகள் இருந்தால் கூட இந்த கற்பூர வாடைக்கும் வேப்பெண்ணெய் வாடைக்கும் மடிந்து விடும். இலை அழுகல் நோயும் வராது, அது மட்டுமின்றி செடிகள் அதிக பூக்கள் வைக்கக் கூடிய ஹார்மோனை இந்த கற்பூர கரைசல் தூண்டி விடும். இதனால் செடி அதிகமான பூக்களை தரும். இதே கற்பூர கரைசலை காய்கறி செடிகளுக்கு தெளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இருந்து வீணாக கீழே ஊற்றும் இந்த தண்ணீரை ரோஜா மற்றும் தக்காளி செடிக்கு கொடுத்து பாருங்க கொத்துக்கொத்தாக பூத்துக் காய்த்து தள்ளும்!

இந்த கற்பூர கரைசல் உரத்தை, செடிகளுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை தாராளமாக கொடுக்கலாம். இதை தொடர்ந்து கொடுத்து வரும் போது செடிகள் அதிக பூக்களை கொடுக்கும். உங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடிக்கு இந்த கரைசலை தெளித்து அதிக பூக்களை பெறுங்கள்.

- Advertisement -