கடன் பிரச்சனை தீர ஐந்து எளிய பரிகாரங்கள்

kadan

நமக்கு இருக்கின்ற கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ஐந்து எளிய வழிமுறைகளைப்பற்றியும், செய்யவேண்டிய பரிகாரங்களைப்பற்றியும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் இப்பதிவில் தெள்ளத் தெளிவாக காண உள்ளோம்.

money

 

கடனை தவிர கொடிய விஷயம் வேறெதுவும் இல்லை. இந்த கடன் பிரச்சனைகளால் கணவன் மனைவிக்கு இடையே நிம்மதி இருக்காது.  நம் அன்றாடவாழ்வின் அணைத்து சுகங்களை இழக்க நேரிடும். குழந்தைகளிடத்தில் நம்மால் அன்பு காட்டவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுவோம். இதனால் நல்ல உணவு, நல்ல உடைகள் என நமது தேவைகளைக்கூட முழுவதுமாக பூர்த்தி செய்யமுடியாமல் திணறி கொண்டுருக்கிறோம். இத்தகைய கடன் பிரச்சனையால் உறவினரிடத்தில் மரியாதையை இழந்து அவமானப்படுகின்றோம்.

ஆகையால், கடன் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் சுகம் பெற சில பரிகாரங்களை செய்யவேண்டும். இந்த பரிகாரங்களை செய்யும் பொழுது முழு மனதோடு செய்யவேண்டும். நடக்குமோ, நடக்குதோ என்ற சந்தேகத்தோடு நீங்கள் செய்தால் பரிகாரம் நிறைவேறாது. நீங்கள் இதை தினமும் வீட்டில் செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் மட்டும் செய்தால் உங்களுக்கு தீர்வு கிடைக்காது. எனவே, இந்த பரிகாரங்களை தினமும் செய்தால் பலன் உண்டாகும்.

money

- Advertisement -

 

தினமும், நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து பரிகாரங்கள்:
1. வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உங்கள் கைகளால் பசுவிற்கு வழங்கி வரவேண்டும். இதில் முக்கியமாக கடனை வாங்கியவர் கைகளால் பசுவிற்கு பாயாசம் தரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் கூட பாயாசம் செய்துதரலாம்.
2. பசியால் வாடும் ஒருவருக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பாடு கொடுக்கவேண்டும்.
3. வியாழக்கிழமை குங்குமம் வாங்கி அதனை, வெள்ளிக்கிழமை அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் சென்று தரவேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் 11 வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.இதில் எந்த தடையும் வராமல் பார்த்து கொள்ளவேண்டும்.
4. கோதுமையில் ஆறு துளசி இலை மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து அரைத்துக்கொண்டு அதை உங்கள் வீட்டில் வைத்து வழிப்பட்டால் கடன் தீருவதை நீங்கள் உணரலாம்.
5. வெள்ளிக்கிழமை அன்று, மஹாலக்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும்.

நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களையும் தொடர்ந்து செய்தால் உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் மரியாதையாகவும், சுகமாகவும் இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற அகத்தியர் கூறும் எளிய வழிமுறைகள்

English Overview:
Here we have Kadan theerkum pariharam in Tamil.