சூடு நிக்க மாட்டேங்குதுன்னு, குப்பையில தூக்கி போடுற ஃபிளாஸ்குக்கு பின்னாடி இவ்வளவு சூப்பர் ஐடியாவா? ரூம் போட்டு யோசித்தாலும் கூட, நமக்கு இப்படி ஒரு ஐடியா வரமாட்டேங்குதே!

- Advertisement -

நாம எல்லார் வீட்டிலும் சுடுதண்ணி ஊற்றி வைக்க, சூடாக பால், டீ, காபி ஊற்றி வைக்க ஃபிளாஸ்க் பயன்படுத்துவோம். ஆனால் அந்த ஃப்ளாஷ்கை ஒரு சில வருடங்கள் மட்டுமே நம்மால் சரியாக பயன்படுத்த முடியும். பயன்படுத்த தொடங்கிய ஒரு சில நாட்களில் அந்த பிளாக்கில் சூடு நிக்காது. அதாவது 5 மணி நேரம் 6 மணி நேரம் வாங்கிய புதுசில், பிளாஸ்கில் சூடு நிற்கும் என்றால், ஒரு சில நாட்கள் கழித்து 1 மணி நேரம் கூட சூடு தாங்காது. உள்ளே ஊற்றிய பொருட்கள் சீக்கிரம் ஆறிவிடும். இப்படிப்பட்ட ஃப்ளாஸ்கை நாம் என்ன செய்வோம். தூக்கி போற்றுவோம்.

ஆனால் இந்த ஃப்ளாஸ்கை நாம் வேறு எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா. சில பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கு இந்த பிளாக்கை பயன்படுத்த முடியும். அந்த குறிப்புகள் என்னென்ன தெரிந்து கொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

பழைய பிளாஸ்க்கை மீண்டும் எப்படி பயன்படுத்தலாம்:
மத்த ஸ்டீல் பொருட்களை, மத்த ஸ்டீல் டப்பாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த பிளாக்குக்கு மேலே இருக்கும் ஸ்டீல் ரொம்பவும் தரமானதாக இருக்கும். ரொம்பவும் தடிமனாக இருக்கும். ஆகவே இந்த ஸ்டீல் பிளாஸ்க் பாட்டிலுக்கு உள்ளே நாம் சில பருப்பு வகைகளை ஸ்டோர் செய்து வைக்கலாம். குளிர்காலத்தில், சில்வர் டப்பாவில் கொட்டி வைத்திருக்கும் பருப்பு வகைகளில் சீக்கிரம் ஈர தன்மை படிந்து விடும். சீக்கிரமாக வண்டு வரச் செய்யும். அதுவே இந்த பிளாஸ்கில், பருப்பு வகைகளை கொட்டி வைத்தால் அதில் சீக்கிரம் வண்டு பூச்சி பிடிக்காது. புழுக்கள் வராது.

உதாரணத்திற்கு பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, ரவை போன்ற பொருட்களை இந்த பிளாஸ்கில் கொட்டி ஸ்டோர் செய்து வைக்கும் போது அது எப்போதும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். அடுத்தபடியாக வருத்த வேர்க்கடலை, முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா, இவைகளை எல்லாம் வாங்கி சாதாரண சில்வர் டப்பாவில் கொட்டி வைத்தால் அது சீக்கிரம் நமத்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் என்னதான் மூடி வைத்தாலும் அதில் எறும்பு வரும். அந்த பொருட்களை எல்லாம் இப்படி பிளாஸ்கில் கொட்டி ஸ்டோர் செய்தால் அதனுடைய மொறுமொறுப்பு தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கும். உள்ளே எறும்பும் போகாது.

- Advertisement -

மிச்சர் காராசேவு போன்ற பொருட்களையும் பிளாஸ்கில் கொட்டி மூடி ஸ்டோர் செய்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். இந்த ஸ்நாக்ஸ் வகைகள் சீக்கிரம் நமக்கு போகாது. இப்படி உங்களுக்கு எப்படி எல்லாம் இந்த பழைய பிளாஸ்க் தேவைப்படுகிறதோ அப்படி எல்லாம் பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். பில்டர் காபி போட சில பேர் வீட்டில் பில்டர் இருக்காது. அப்படிப்பட்ட வீடுகளில் இந்த பிளாக்கை எடுத்துக்கோங்க. அதில் தேவையான அளவு காபித்தூள், போட்டுக்கோங்க. கூடவே இனிப்பு சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரையையும் இதிலேயே போட்டுடுங்க. தேவையான அளவு சுடுதண்ணீரை இதில் ஊற்றி ஒரு மூடி போட்டு வைத்து விட்டால் போதும். 1/2 மணி நேரத்தில் அடியில் பில்டர் காபி திப்பி தங்கிவிடும். மேலே நமக்கு தேவையான பில்டர் காபி டிக்காஷன் தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு பாவப்பட்ட ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய ஒரு ஈஸியான ஐடியா! இதை தெரிஞ்சுகிட்டா கை வலிக்காமல் ஃபிரிட்ஜை புதுசு போல மாத்தலாம்.

இப்போது தேவையான அளவு டிகாஷனை டம்ளரில் ஊற்றங்கள். இதில் நாம் நாட்டு சர்க்கரை சேர்த்து இருப்பதால் அந்த இனிப்பு சுவையும் உங்களுக்கு கிடைத்துவிடும். தேவையான அளவு பாலை ஊற்றி கலந்தால் சூப்பரான காபி தயார். டிராவலின் போது நீங்கள் இதை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான காபி அதிக செலவு செய்யாமல் கிடைக்கும். இந்த மேல் சொன்ன வீட்டு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -