ரோஜா, செம்பருத்தி போன்ற பூச்செடிகள் உங்க வீட்டில் இருக்கா? கொஞ்சமா பூக்கும் உங்க செடியை கொத்துக் கொத்தாக நிறைய பூக்க செய்ய பழைய சாதம் இருந்தா இப்படி செய்யுங்க!

flower-plant-palaya-sadam
- Advertisement -

பூச்செடிகள் வீட்டில் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அது நிறைய பூக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே உங்களுடைய பூச்சடியும் கொத்து கொத்தாக பூக்களை கொடுக்க அதற்கு நல்ல ஊட்டச்சத்து தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஊட்டச்சத்துள்ள செடியே நிறைய மகசூலையும் கொடுக்கும். எனவே பூச்செடி நிறைய பூக்க என்ன செய்யலாம்? என்கிற எளிய ரகசிய தோட்ட குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா, செம்பருத்தி போன்றவை இயல்பாகவே அதிகம் பூக்கக் கூடியவை. ஆனால் அதற்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதாலும், சூரிய ஒளி, தண்ணீர், மண் கலவை, உரம் போன்றவை தேவையான அளவு கிடைக்காததாலும் பூக்களை குறைத்துக் கொடுக்கும். சில செடிகள் பூக்கவே பூக்காது, இலை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும். இப்படியான பிரச்சினைகளை எளிதாக நீக்கி உங்களுடைய பூச்செடியும் கொத்து கொத்தாக பூக்களை கொடுக்க இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

நம் வீட்டில் தேவை இல்லாமல் மீந்து போகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைப்போம். இந்த பழைய சாதத்தை நீங்கள் பயன்படுத்த முடியாவிட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு கரைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் ஊற விட்டு விடுங்கள். பின்னர் இதில் அரிசி களைந்த தண்ணீரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கருப்பு உளுந்தை பவுடர் போல அரைத்து சேருங்கள்.

இந்த கலவையை நன்கு ஒருமுறை கலந்து விட்டு, பின்னர் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்த இந்த கலவையில் இருந்து நீங்கள் மூன்று லிட்டர் தண்ணீர் தாராளமாக ஊற்றிக் கொள்ளலாம். இப்போது ஐந்து லிட்டர் தண்ணீர் உங்களுக்கு கிடைத்து விட்டது. இந்த தண்ணீரை உங்களுடைய பூச்செடிகளுக்கு, வேரில் நன்கு 2 மக்கு அளவிற்கு ஊற்றி விடுங்கள். இப்படி எல்லா பூச்செடிகளையும் நீங்கள் செழிப்பாக வளரச் செய்ய இந்த ஒரு சத்துள்ள தண்ணீரை கொடுத்தாலே போதும்.

- Advertisement -

கருப்பு உளுந்தில் ஏராளமான மைக்ரோ நியூட்ரிஷியன்களும், கால்சியம், புரோட்டீனும் நிறைந்து காணப்படுகிறது. பழைய சாதம் தண்ணீர் மற்றும் அரிசி களைந்த தண்ணீர் போன்றவற்றிலும் நுண்ணுயிரிகள் வளர்ந்து இருக்கும். இதை நீங்கள் உங்களுடைய பூச்செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல செய்து ஊற்றி வந்தால் செடிகள் முன்பு கொடுத்ததை விட, கொத்துக் கொத்தாக பூக்களை இரண்டு மடங்காக அள்ளிக் கொடுக்கும். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டு பூச்செடிகளை பூ பூவாக பூத்துக் குலுங்க செய்ய, இத ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே:
இந்த சிகப்பு பொன்னாங்கண்ணியை இப்போதே நட்டு வைத்து விடுங்கள். வரும் மழைக்காலத்தில் இந்த கீரை சக்கை போடு போடும்.

பழைய சாதம் தண்ணீர் எல்லாம் சேர்க்காமல் நீங்கள் கருப்பு உளுந்தை மாவாக அரைத்து வைத்துக் கொண்டால் அவ்வப்பொழுது உங்களுடைய செடிகளுக்கு கொடுத்து வந்தாலே நிறைய சத்து கிடைக்கும் ஆனால் இதில் எறும்பு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு எனவே எறும்பு தொல்லை இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் மற்றபடி எல்லா செடிகளுக்கும் காய்கறி செடிகளுக்கு கூட கருப்பு உளுந்து பயன்படுத்தினால் நிறைய காய்கறிகளை வளர செய்துவிடலாம்.

- Advertisement -