இந்த சிகப்பு பொன்னாங்கண்ணியை இப்போதே நட்டு வைத்து விடுங்கள். வரும் மழைக்காலத்தில் இந்த கீரை சக்கை போடு போடும்.

- Advertisement -

கீரை உடலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இந்த சிகப்பு பொன்னாங்கண்ணி கீரையிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல்அழகை மேம்படுத்தும் தோலுக்கு நல்ல ஒரு மினுமினுப்பு தன்மையும் கிடைக்கும். அது மட்டும் இன்றி இதில் இரும்பு சத்து, மினரல் போன்று சத்துக்கள் அதிகம் உள்ளது. பொதுவாகவே பொன்னாங்கண்ணி கண்களுக்கு மிக மிக நல்லது. இந்த கீரையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையை வராது என்று கூறுவார்கள். இந்த சிவப்பு பொன்னாங்கண்ணி மஞ்சள் காமாலைக்கு மிக மிக நல்ல ஒரு மருந்து. இத்தனை மருத்துவ குணம் மிக்க இந்த கீரை நம் வீட்டிலே மிக மிக எளிமையாக வளர்த்து விடலாம் அதை எப்படி என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்த சிகப்பு பொன்னாங்கண்ணி செடியை வைப்பதற்கு நீங்கள் தனியாக விதை, பதியம், உரம் இதை போன்று எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மிக மிக எளிமையாக நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் கூட இதை வைத்து வளர்த்து விடலாம்.

- Advertisement -

அதற்கு முதலில் நீங்கள் ஒரு கட்டு பொன்னாங்கண்ணிக் கீரை வாங்கிக் கொள்ளுங்கள். அதை அடிப்பாகத்தை நறுக்கி தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இல்லை கீரையை உருவி தண்டை அப்படியே வைத்தாலும் சரி. தண்டை எடுத்த பிறகு மீதமுள்ள கீரையை சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இப்போது ஒரு தொட்டியோ அல்லது செடி நட்டு வைக்கும் பையோ எடுத்து கொள்ளுங்கள். அதில் மண் போட்டு பரப்பி விடுங்கள். மண் மிகவும் அழுத்தம் இல்லாமல் லேசாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். இப்போது இந்த பொன்னாங்கண்ணி கீரை தண்டை கொஞ்சம் இடைவெளி விட்டு ஆங்காங்கே நட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மேலே கொஞ்சமாக மணல் பரப்பி லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள். இதற்கு தனியாக வேறு உரங்கள் எதுவும் போட வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் வீட்டில் அரிசி பருப்பு கழுவும் தண்ணீரையும், ஊற்றினாலே போதும். இந்த கீரைக்கு உரமாக நாம் அன்றாடம் தேவையில்லை என்று தூக்கி போடும் இந்த காய்கறி கழிவுகளே இந்த கீரைக்கு நல்ல ஒரு உரம்.

இதற்கு வெயிலும் அதிக அளவில் தேவை படாது. நல்ல நிழலில் கூட வளரும் தன்மை உடையது. வைத்த சில நாட்களில் தண்டுகள் முளைத்து அதிலிருந்து கீரையும் நன்றாக வர ஆரம்பித்து விடும். இதை வளர்க்கும் முறை அனைத்துமே மிக மிக எளிமை. தண்ணீர் அதிகமாகி விடும் என்ற கவலை இல்லை வெயில் இல்லையே என்ற பிரச்சனை இல்லை. அதிகபட்சம் மூன்று வாரங்களில் இந்த கீரை நன்றாக வளர்ந்து விடும். ஒரு முறை வைக்கும் இந்த தண்டிலிருந்து நான்கு அல்லது ஐந்து முறை வரை கீரை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேலும் வளரத்தான் செய்யும். ஆனால் சத்துக்கள் சற்று குறைவாக இருக்கும் எனவே எடுத்து விட்டு மண்ணை சற்று கிளறி வேறு தண்டை மாற்றி வளர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க பூச்செடியில் வெள்ளை வெள்ளையாக பூச்சி இருக்கா? கொத்துக்கொத்தா எறும்பு மொய்க்குதா? அப்படின்னா கொஞ்சம் மர சாம்பல் இருந்தா இப்படி செய்யுங்க, மீண்டும் பச்சை பசேலென இலைகள் தளிர்க்கும்!

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய இந்த சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை வீட்டில் மாடித்தோட்டம் வைத்து இருப்பவர்களுக்கு வளர்க்க இன்னும் சுலபம். இது மட்டுமின்றி மழைக்காலங்களில் பெரும்பாலானது கீரை கிடைக்காது. ஆனால் இந்த பொன்னாங்கண்ணி கீரை ஆனது மழைக்காலங்களில் மட்டுமே அதிகமாக வளரக்கூடிய தன்மை கொண்டது. இனி மழைக்காலம் தொடங்கி விட்டால் கீரை கிடைக்காதேஎன்ற கவலை வேண்டாம். இப்போதே இந்த பொன்னாங்கண்ணிகீரையின் நட்டு வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -