உங்க வீட்டு ஃபிரீசரில் அடிக்கடி இனி, இப்படி பனிமலை போல ஐஸ் கட்டவே கட்டாது. இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

idli
- Advertisement -

சமையல் அறையில் பெண்களுக்கு தேவையான உபயோகமுள்ள சில சமையல் குறிப்பையும் வீட்டு குறிப்பையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பை எல்லாம் பின்பற்றும்போது உங்களுடைய கடினமான சில வேலைகள் சுலபமாக மாறும். அவசர அவசரமாக டென்ஷனாக வேலை செய்வது குறைந்தால் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது தானே. உங்களுக்கு கிச்சனில் தேவைப்படக்கூடிய ஸ்மார்டான சில குறிப்புகள் இதோ.

குறிப்பு 1:
பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இட்லியை அதிகமாக சமைக்க கூடிய வழக்கம் இருக்கும். இட்லி மாவு ரொம்பவும் அடி ஆகி விட்டது. அந்த மாவில் இட்லி வார்ப்பது ரொம்பவும் சிரமம். அதில் இட்லி வாத்து வைத்தாலும் கல்லு போல வரும். யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அடி மாவிலும் சாஃப்ட்டான இட்லி வர வைப்பது எப்படி.

- Advertisement -

15 இட்லி சுடும் அளவிற்கு அடி மாவு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு 2 ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை நமக்கு தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை போட்டு அது மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் போல ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொட்டுக்கடலையை ஊற வைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொட்டுக்கடலை விழுதை இட்லி மாவோடு ஊற்றி, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இட்லி மாவை அடித்து கலந்து இட்லி வார்த்து பாருங்கள். முதல் மாவில் சுட்ட இட்லி போலவே, அடி மாவு இட்லியும் சாஃப்ட்டாக கிடைக்கும்.

குறிப்பு 2:
காலையில் அவசர அவசரமாக தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை வார்க்கும் போது தான் கல்லோடு தோசை ஒட்டிக் கொள்ளும். அந்த சமயத்தில் நிச்சயமாக இல்லத்தரசிகளுக்கு டென்ஷன் ஆகும். ஒரு சிறிய துண்டு புளியை வெள்ளை காட்டன் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த புளி முடிச்சை எண்ணெயில் தொட்டு தோசை கல்லில் நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்பு தோசை வார்த்தால் இரும்பு கல்லில் கூட நான் ஸ்டிக் தவாவில் சுட்ட தோசை போல மொறு மொறு தோசை ஒட்டாமல் கிடைக்கும். (ஒவ்வொரு தோசை வார்ப்பதற்கு முன்பும் புளி முடிச்சை எண்ணெயில் தொட்டு கடாயில் தேய்க்க வேண்டும்.)

- Advertisement -

குறிப்பு 3:
எல்லோர் வீட்டு பிரீசரிலும் பெரும்பாலும் இந்த பிரச்சனை இருக்கும். வாரத்தில் ஒரு நாள் ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டிகளை கரைத்து, ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து வைத்தாலும் மீண்டும் மீண்டும் ஐஸ் கட்டிகள் ப்ரீசரில் நிறைய வந்து கொண்டே இருக்கும். இது நமக்கு சிரமம் தரக்கூடிய ஒரு விஷயம்தான். நீண்ட நாட்களுக்கு ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் சேராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது.

ஒரு சிறிய காட்டன் துண்டின் மேல் கொஞ்சமாக தூள் உப்பை பரப்பிக் கொள்ளுங்கள். காட்டன் துணியில் இருக்கக்கூடிய கல் உப்பை அப்படியே ஃப்ரீசரின் உள்பக்கத்தில் எல்லா இடங்களிலும் லேசாக படும்படி தடவி விட்டு விட வேண்டும். அதன்பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் சால்ட் உப்பை போட்டு அதை ஃப்ரீசருக்குள் வைத்து விடுங்கள். இப்படி செய்தால் ஐஸ் கட்டியானது சீக்கிரம் கட்டாது. முயற்சி செய்து பாருங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை இப்படி உப்பை ஃப்ரீசருக்கு உள்ளே தடவி வைத்தால் நிறைய ஐஸ் கட்டிகள் பனிமலை போல கட்டாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில சமயம் ஃப்ரீசரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து விடுவோம். அதன் மேலே ஐஸ்கட்டிகள் நிறைய கட்டிவிடும். உதாரணத்திற்கு சில பேர் குக்கருக்கு பயன்படுத்தும் கேஸ் கட்டை ஃப்ரீசரில் வைப்பார்கள். வைத்துவிட்டு மறைந்திருப்பார்கள். அவசர தேவை எனும்போது அந்த கேஸ் கட், ஐஸ் கட்டியில் ஒட்டி இருக்கும். ஃப்ரீசரில் இருந்து அந்த கேஸ் கட்டை எடுப்பது மிகவும் கஷ்டம். இப்படிப்பட்ட சிரமமான சமயத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் சுடுதண்ணீரை அந்த ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டியின் மேல் ஊற்றிவிட்டு, அதன் பின்பு தேவையான பொருளை எடுக்கும்போது அது நமக்கு சுலபமாக கிடைத்து விடும். உங்களுக்கு மேல் சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -