வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் உப்பை இப்படி வைத்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பல மடங்கு பெருகும். வீடு சுபிட்சம் பெறும்.

mahalashmi2

இந்த வெள்ளிக்கிழமை என்பது முழுக்க முழுக்க மகாலட்சுமிக்கு உரிய தினம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்றே இந்த வெள்ளிக் கிழமையை சொல்லலாம். வீட்டில் இருக்கும் பெண்களும் மகாலட்சுமி ஸ்வரூபத்தை கொண்டவர்கள் தான். ஆக வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியின் அம்சத்தோடு இந்த வெள்ளிக்கிழமை பூஜையை, வீட்டில் மனநிறைவோடு எந்த முறையில் செய்தாலும், அந்த மகாலட்சுமி நீங்கள் செய்யும் பூஜையை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த கல் உப்பை வாங்கி, நம் வீட்டில் உப்பு ஜாடியில் நிரப்பி வைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இன்று வெள்ளிக்கிழமை! நாம் எல்லோரும் நம்முடைய வீட்டில் காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ மனநிறைவோடு மகாலட்சுமிகாண பூஜையை செய்து முடித்து இருப்போம்.

இன்றைய நாள் இரவு, அதாவது வெள்ளிக்கிழமை இரவு எல்லோர் வீட்டிற்கும் மகாலட்சுமி வருகை தருவாள் என்பது ஒரு ஐதீகம். நம்முடைய வீட்டிற்கும் இரவு மகாலட்சுமி தேவி வருகை தரும் போது, நம் வீட்டு பூஜை அறை எப்படி இருந்தால், அவள் மனநிறைவோடு நம் வீட்டில் தங்குவாள்? மகாலட்சுமிக்கு விருப்பமான கல் உப்பை நம் வீட்டு பூஜை அறையில் எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

salt

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி பௌலில் அல்லது பீங்கான் பவுலிலோ முழுமையாக கல் உப்பை நிரப்பி, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் ஒரு பூவை வைத்து, அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.  இந்த பவுலின் முன்பாக ஒரு கண்ணாடியை வைத்து விடுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கல்லுப்பு கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி வைக்க வேண்டும்.

- Advertisement -

பூஜைக்காக உங்களுடைய வீட்டில் கண்ணாடி தனியாக இல்லை என்றாலும் பரவாயில்லை. முகம் பார்ப்பதற்கு என்று சிறிய கண்ணாடி இருக்கும் அல்லவா? அந்த கண்ணாடியை நன்றாகத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, அதற்கு ஒரு மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

mirror

இரவு முழுவதும் அந்த கல்லுப்பு கண்ணாடியில் பிரதிபலிக்கும் படி உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே அப்படியே இருக்கட்டும். இப்படியாக கல்லுப்பைக் பூஜை அறையில் வைக்கும் போது, உங்களுடைய வீட்டில் லட்சுமிகடாட்சம், நேர்மறை ஆற்றல், சுபிட்சம் பல மடங்கு நிரம்பி வழியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கல் உப்பில் இருந்து வெளிவரக்கூடிய, நேர்மறை ஆற்றல் உங்கள் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும் போது, மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு இரவு நேரத்தில் வருகை தரும் போது, நிச்சயமாக மன மகிழ்ச்சி அடைவாள். உங்களுக்கு தேவையான வரத்தினை மனமார அள்ளிக் கொடுத்து விடுவாள். இதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

poojai

வீட்டில் இருக்கும் தரித்திரத்தை நீக்க வெள்ளிக்கிழமை இரவு மறக்காமல் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்யலாம். நிச்சயமாக நல்ல பலன் உண்டு. மறுநாள் காலை இந்த உப்பை எடுத்து மகாலட்சுமியின் பெயரைச் சொல்லி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தண்ணீரில் கரைய வேண்டும் என்று தண்ணீரில் போட்டு கரைத்து, கால் படாத மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடுங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.