கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் சிறப்புக்கள்

ramar

உலகத்தில் மற்ற எந்த உயிரை காட்டிலும் மனிதர்கள் வாழ்க்கை தான் பல ஏற்றங்கள், இறக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. கடவுளே மனிதனாக பிறந்தாலும் துன்பங்களை அனுபவிக்க தான் வேண்டியிருக்கிறது. அப்படி காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த மிக சிறந்த அவதாரங்களில் ஒன்று தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம். ஸ்ரீ ராமர் தனது வாழ்வில் அனுபவித்த இன்பங்களை விட துன்பங்களே அதிகம். என்றாலும் மனிதர்கள் எப்படி வாழ என்பதற்கு உதாரண புருஷராக திகழ்கிறார். இப்படிப்பட்ட ஸ்ரீராமருக்கு சோழ மன்னன் எழுப்பிய கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மனித குலத்திற்கு உதாரண புருஷராக திகழும் ஸ்ரீ கோதண்ட ராமர் இருக்கிறார். சோழ மன்னர்களில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய கோயில் இது. பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட தொண்டைமான் மன்னர் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள கல்வெட்டு குறிப்புக்கள் இக்கோயில்களில் இருக்கின்றன.

முற்காலங்களில் நமது நாடு பல சிற்றரரசு தேசங்களாக பிரிந்திருந்த போது நாம கீர்த்தனை செய்யும் கலைஞர்கள் ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு சென்று நாம கீர்த்தனம் செய்வதோடு, அங்கே ஆட்சி புரியும் மன்னர்கள் பற்றியும் புகழ்ந்துரைப்பர். அப்படி ஒரு முறை தீவிர சிவ பக்தனான கண்டராதித்த சோழன் ராமாயண நாம கீர்த்தனை கேட்கும் போது அதில் வரும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா பிராட்டியார் மீது மிகுந்த பக்தி கொண்டு தனது ராஜ்ஜியத்தில் ராமருக்கு ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார்.

Lord-Rama

அப்போது சோழ தேசத்தின் பகுதியாக இருந்த இந்த கந்தர்வகோட்டையில் அழகிய ராமர் கோயிலை கட்டி, அங்கு பிராமணர்கள் இன்ன பிற மக்கள் வாசிக்க கிராமத்தையும், பால் தேவைகளுக்கு பசுக்கள் போன்றவற்றையும் தானமாக அளித்து, ராமருக்கு நித்ய பூஜைகள் நடக்கும் படி ஏற்பாடுகள் செய்தான். இந்த கோதண்ட ராமருக்கு பூஜைகள் செய்து வழிபட தொடங்கிய பின்பு சோழ ராஜ்ஜியம் மேலும் செழித்தோங்கியது என கூறப்படுகிறது. இக்கோயிலை கட்டிய கண்டராதித்த சோழனின் சிலை இக்கோயிலில் இன்றும் உள்ளது.

- Advertisement -

கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோயில் சிறப்புக்கள்

இக்கோயில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோயிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோயிலின் ஆச்சர்ய நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ramayanam

இக்கோயிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் – 613301

தொலைபேசி எண்

இல்லை

இதையும் படிக்கலாமே:
அப்பக்குடத்தான் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Gandharvakottai kothanda ramar temple details in Tamil. It is also called Kothanda ramar kovil gandharvakottai in Tamil or Gandharvakottai temple in Tamil or Pudukkottai temples in Tamil or Gandharvakottai kovil in Tamil or Pudukkottai mavatta koilgal in Tamil.