தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டாலே செலவே இல்லாம உரங்களை தயாரித்து செடி வளர்க்கலாம். புதிதாக தோட்டம் வைப்பவர்கள் கூட எளிதாக தோட்டம் வைக்க எளிமையான டிப்ஸ்.

garden tips
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் மரம் செடி கொடிகளை வளர்ப்பது மிகவும்அவசியமான ஒன்று. பெரிய அளவில் தோட்டம் வைத்து பராமரிக்கவில்லை என்றாலும் இயன்ற அளவு நம்மை சுற்றி இருக்கும் இடங்களில் சின்ன சின்ன செடி கொடி வகைகளாவது வளர்ப்பது நல்லது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்த மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசையே இருந்தாலும் கூட, அதற்கான பராமரிப்பும், செலவும் அதிக அளவில் இருக்கும் என்பதாலே நிறைய பேர் மரம் செடிகளை வைப்பதில்லை.

இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அழகான சின்ன தோட்டத்தை அமைப்பதை பற்றிய தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த முறையில் நாம் செடிகளை வளர்க்கும் போது இதற்கு என தனியாக எந்த செலவும் செய்ய வேண்டியது இருக்காது.

- Advertisement -

முதலில் சிறிய அளவில் தோட்டம் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் இருப்பதை வைத்து செடிகளை வளர்க்க ஆரம்பிக்கலாம். இதற்கு மண் கலவை மிகவும் அவசியமானது மண் கலவை சரியான தரத்துடன் இருந்தால் எந்த செடியும் வீணாகாமல் நல்ல முறையில் செழித்து வளரும். அதே போல் வெளியில் இருந்து விதைகளையும், செடிகளையும் காசு கொடுத்து வாங்காமல் வீட்டில் நாம் பயன்படுத்தி மீதமாகும் பொருட்களில் இருந்து வளர்க்கக் கூடிய செடிகளை முதலில் வளர்த்து பார்க்கலாம்.

இதற்கு முதலில் நம் வீட்டில் மீதமாகும் கிச்சன் கழிவுகளை சேகரிக்க வேண்டும். அதற்கு தேவை இல்லாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் துளை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீதமாகும் கழுவுகளை எல்லாம் சேகரித்துக் கொண்டே வாருங்கள். அதே போல் சமையலுக்கு பயன்படுத்தி தேங்காய் நார் இவைகளையும் தனியாக சேகரித்துக் கொண்டு வாருங்கள். பழங்களின் தோள்கள் அழுகிய படங்கள் இவற்றை தனியாக சேகரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செடியை குரோ பேக்கில் வைப்பதாக இருந்தால் அதில் இருக்கும் துளைகளுடன் மேலும் ஒன்று இரண்டு துளிகளை போட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் தண்ணீர் சரியாக வடியும் தொட்டியில் வைப்பதாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் உடைந்து போன பிளாஸ்டிக் அல்லது அரிசி கோணி இப்போது பிளாஸ்டிக்கில் வருகிறது அவற்றையெல்லாம் கூட செடி வைக்க பயன்படுத்தலாம்.

செடி வைக்க தொட்டில் ஒரு லேயர் வரை மணலை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் தேங்காய் நார் உரம் இருப்பின் அதை சேர்க்கலாம் அல்லது உங்கள் வீட்டில் சுற்றி இருக்கும் களைச் செடிகளை கூட பறித்து போடலாம். எதுவும் இல்லை எனில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் கிச்சன் கழிவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு லேயர் மணல் மறுபடியும் தேங்காய் நார் அல்லது பழக்கழிவு இப்படி ஒரு லேயர் மண் போட்டவுடன் அடுத்து மேலே இது போல ஏதாவது ஒரு வார்த்தை போட்டு வைத்து விடுங்கள் குறைந்தது ஒரு மாத காலமாவது இது அப்படியே இருக்க வேண்டும். மணலுடன் இவை எல்லாம் மக்கி நல்ல உரமண்ணாக தயாராகி விடும்.

- Advertisement -

எந்த செடியாக வைப்பதாக இருந்தாலும் இந்த உரத் தொட்டியில் அப்படியே வைத்தாலே போதும். இதற்கென தனியாக நீங்கள் வேறு எந்த உரத்தையும் போடத் தேவையில்லை. அதன் பிறகு செடிக்கு விதை வாங்க நினைத்தால் நீங்கள் முதலில் நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, காய்ந்த மிளகாய், வர மல்லி, எலுமிச்சை, குடைமிளகாய், வெண்டைக்காய் போன்றவற்றையெல்லாம் ஒன்று இரண்டு மீதமானதோ அல்லது அழுகியதோ எடுத்து நல்ல நிழலில் ஆற வைத்து அதில் உள்ள விதைகளை எடுத்து நீங்கள் விதைத்து வளர்க்கலாம்.

இந்த செடிகளுக்கு அதிக பராமரிப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நம் வீட்டில் அரிசி, பருப்புக் கழுவும் தண்ணீரை எல்லாம் இதற்கு சேர்த்தாலே போதும் செடிகள் நன்றாக செழித்து வளரும் .அதே போல் செடிக்கு உரச் செலவும் அதிக அளவில் செய்ய வேண்டியது கிடையாது. முட்டை ஓடு, வாழைப்பழ தோல் இவற்றையெல்லாம் தனியாக நிழலில் ஆற வைத்து ஒன்றாக சேர்த்து பவுடர் செய்து செடிகளுக்கு கொடுத்து வரும் போது செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க உரமாக இருக்கும். பூச்சித் தொல்லை இருப்பின் வேப்பெண்ணை கரைசலை தெளிக்கலாம். மணலில் சிறிதளவு மஞ்சள் தூவும் போது எறும்பு தொல்லையிலிருந்து செடிகளை காத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இனி வீட்டில் செடி வைக்க இடம் இல்லை, நேரம் இல்லை என்ற கவலையே வேண்டாம். இதோ இருக்கும் இடத்திலே அதிக பாராமரிப்பு இல்லாமல் எளிமையாக வளரக் கூடிய இந்த செடிகளை வளர்க்க முயற்சி செய்யலாமே.

இவையெல்லாம் மிக சாதாரணமான குறிப்புகளாக தோன்றும் ஆனால் தோட்டம் வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்தி பாருங்கள் இதனால் பெரும் அளவு பணம் நேரம் எல்லாம் மிச்சம் ஆவதுடன் எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் செடிகளை வளர்க்கலாம்

- Advertisement -