இனி வீட்டில் செடி வைக்க இடம் இல்லை, நேரம் இல்லை என்ற கவலையே வேண்டாம். இதோ இருக்கும் இடத்திலே அதிக பாராமரிப்பு இல்லாமல் எளிமையாக வளரக் கூடிய இந்த செடிகளை வளர்க்க முயற்சி செய்யலாமே.

garden tips
- Advertisement -

வீட்டில் ஒன்று இரண்டு செடிகளாவது வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைவரின் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இதற்கு ஒரு புறம் இடவசதி தேவை என்றாலும் கூட, இன்னொரு புறம் அதை சரியான முறையில் பராமரித்து வளர்க்கவும் வேண்டும். ஒரு வேளை உங்களிடம் செடி வைக்க அதிக இடவசதியும் இல்லை உங்களால் அதை பராமரிக்கவும் முடியாது என்றாலும் கூட கவலையே வேண்டாம். இந்த செடிகளை வளர்க்க முயற்சி செய்து பாருங்கள். இதற்கென தனியாக நீங்கள் எந்த வித பராமரிப்பு செய்ய வேண்டியதில்லை. வாங்க இப்போது அந்த செடிகள் குறித்து இந்த வீட்டுத் தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையில் நாம் முதலில் பார்க்கப் போவது பச்சை மிளகாய் செடியை பற்றி தான். இதற்கு நீங்கள் பெரிதாக எந்த பராமரிப்பு செலவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் சமையலுக்கு வாங்கும் பச்சை மிளகாய் ஒன்றை நன்றாக பழுக்க வைத்து காய்ந்த பிறகு அதில் இருக்கும் விதைகளை எடுத்து நிழலில் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த விதைகளை சிறிய குரோபேக்கில் சிறிது இடைவெளி விட்டு நட்ட பிறகு லேசாக தண்ணீர் தெளித்து வந்தாலே போதும் இது முளைத்து விடும்.

- Advertisement -

அடுத்து குடைமிளகாய் இதையும் இதே போல கடைகளில் வாங்கிய பிறகு நன்றாக சிகப்பு நிறமாக மாறி மேல் தோல் எல்லாம் சுருங்கிய பிறகு இதில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து அதையும் இதே போல நிழலில் உலர்த்திய பிறகு குரோபேக்கில் கொஞ்சம் இடைவேளை விட்டு நட்டு விடுங்கள். இதற்கும் லேசாக தண்ணீர் மட்டும் தெளித்தாலே போதும். அதிக அளவு பராமரிப்பு தேவையில்லை இந்த செடிகள் நன்றாக முளைத்து வரும்.

இந்த வகையில் அடுத்து நாம் பார்க்கப் போவது தக்காளி செடி. இதற்கும் வெளியில் கடைகளில் கூட காசு கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. நம் சமையலுக்கு போக மீதி இருக்கும் தக்காளியை அழுக விட்டு அதன் விதைகளை எடுத்து இதே போல செய்து நட்டு விடுங்கள். இதுவும் நன்றாக முளைத்து வரும்.

- Advertisement -

கொத்தமல்லி இது சாதாரணமாக ஒரு வாரத்திற்குள்ளாவது முளைத்து வரக் கூடிய குறுந் தாவர வகையை சார்ந்தது. இதற்கு நீங்கள் கடைகளில் கிடைக்கும் வர மல்லியை வாங்கி வந்து நிழலில் உலர்த்தி பிறகு கைகளால் லேசாக கசக்கினால் அது ஒன்று இரண்டாக உடைந்து விடும் அதை குரோ பேக், சிறிய தொட்டியிலோ அல்லது கொட்டாஞ்குச்சியில் கூட இதை நட்பு வைத்து வளர்க்கலாம்.

இந்த வகையில் அதிக பராமரிப்பு இல்லாமல் வளர்க்கக் கூடிய மர வகையில் எலுமிச்சை கன்றை வளர்க்க முயற்சி செய்யலாம். இது இப்பொழுது சிறிய அளவில் தொட்டிகளில் வளர்க்கக் கூடிய செடிகளாக கூட கார்டனில் கிடைக்கிறது. அல்லது வீட்டில் இருக்கும் எலுமிச்சை பழத்தில் நன்றாக பழுத்த பழத்தில் இருந்து விதைகளை எடுத்து ஆற வைத்து நட்ட பிறகு இது முளைத்து வந்த பின் செடியை வேறு ஒரு பெரிய தொட்டியோ அல்லது பெரிய குரோபாக்கிலோ கூட வைத்து வளர்க்கலாம். இந்த எலுமிச்சை கன்றுக்கு அதிகமான உரம் தண்ணீர் என்று எந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்தில் கூட வெற்றிலைக் கொடியில் ஒரு இலை கூட வாடாம நல்ல தள தளன்னு வளர கீழே ஊத்துற இந்த தண்ணில ஒரு கிளாஸ் மட்டும் ஊத்துனா போதும்.

உங்களுக்கு செடிகள் வளர்க்க விருப்பம் இருந்து அதை பராமரிக்க நேரம் இல்லாத பட்சத்தில் இது போல சின்ன சின்ன செடிகளை கொஞ்சமான இடத்தில் அல்லது குரோபேக், தொட்டிகளில் கூட நட்டு அழகாக வளர்த்துக் கொள்ளலாம். இதை முதல் முறை விதைக்கும் போது இந்த மண் கலவையை மட்டும் கொஞ்சம் சரியான முறையில் கலந்து கொண்டால் போதும். நீங்கள் அதற்கு அடுத்து உரமாக வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கிச்சன் வேஸ்ட், அரிசி, பருப்பு கழுவிய தண்ணீர் போன்றவற்றை ஊற்றினாலே போதும் செடிகள் நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -