இந்த வெயில் காலத்தில் கூட வெற்றிலைக் கொடியில் ஒரு இலை கூட வாடாம நல்ல தள தளன்னு வளர கீழே ஊத்துற இந்த தண்ணில ஒரு கிளாஸ் மட்டும் ஊத்துனா போதும்.

betal leaf
- Advertisement -

இந்த வெற்றிலை கொடியானது எல்லோர் வீட்டிலும் வைத்து வளர்க்கக் கூடிய முக்கியமான ஒரு கொடியாக பார்க்கப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்த்தால் இந்த கொடியை வீட்டில் வளர்ப்பதால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்ப்பது பணவரவுக்கான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மட்டும் இன்றி வெற்றிலையில் நிறைய மருத்துவ குணங்களும் வீட்டு பயன்பாடுகளுக்கும் உள்ளது. இப்போது இந்த வீட்டுக் தோட்டம் பதிவில் வெயில் காலத்தில் வெற்றிலை கொடி வாடாமல் செழிப்பாக வளர்ப்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெற்றிலை கொடியை பொறுத்த வரையில் நேரடியாக வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. வெயிலின் நிழல் படும் இடத்தில் வைத்தாலே போதும். ஏனென்றால் இது மெல்லிய தண்டுகளை உடைய கொடி. அதிகமான வெயில் படும் பொழுது கொடி சீக்கிரம் வாடி வதங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டும் இன்றி இதற்கு தண்ணீரும் சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

வெற்றிலைக் கொடி வாடாமல் இருக்கு இயற்கை உரக்கரைச்சல்
இந்த நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் மீல்மேக்கரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை நன்றாக ஊற விடுங்கள். அதன் பிறகு மீல்மேக்கரை நன்றாக பிழிந்து எடுத்து விட்டு தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மீல்மேக்கரை வீணக்கமால் சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

அடுத்ததாக வாழைப்பழத் தோலை எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள். இதற்கு உங்களிடம் எவ்வளவு வாழைப்பழம் தோல்கள் இருக்கிறதோ எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தோலை அளவாக போட வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. நறுக்கிய வாழைப்பழத் தோலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்ட பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்த மீல்மேக்கர் ஊற வைத்து தண்ணீரை இதில் ஊற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பாட்டிலில் முழுதாக நிரம்பும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். மீள்மேக்கர் ஊற வைத்த தண்ணீர் போதவில்லை என்றால் சாதாரண தண்ணீரும் ஊற்றிக் கொள்ளலாம். இதை ஊற்றி மூடி போட்டு இரண்டு நாள் அப்படியே வைத்து விடுங்கள். இடையிடையே எடுத்துக் குலுக்கி விட வேண்டும். இந்த கரைச்சலை நிழல் பாங்கான இடத்தில் வைத்து விடுங்கள்.

இரண்டு நாட்கள் கழித்து இந்த உரக்கரைச்சலை வடிகட்டி எடுத்து வடிகட்டி ஊற்றி எடுத்து கொண்டால் அருமையான இயற்கை உரக்கரைசல் தயார். இந்த வாழைப்பழ தோலை கூட வீணாக்காமல் செடிகளுக்கு உரமாக போட்டு விடுங்கள். இந்த கரைசலில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வெற்றிலை கொடியின் வேர்ப்பகுதியில் மண்ணை கிளறி விட்டு லேசாக ஊற்ற வேண்டும். இதை வாரம் இரு முறை மட்டும் கொடுத்து வந்தால் போதும் கொடி வாடி வதங்காமல் செழித்து வளரும்.

இதையும் படிக்கலாமே: வெற்றிலை கொடி வளர்க்க ஆசையா இருக்கா? உங்க கிட்ட ஒரே ஒரு வெற்றிலை இருந்தா போதுங்க, அத வச்சி நீங்களே வெற்றிலை கொடியை ஈஸியா வளர்க்கலாம் வாங்க.

நாம் வீணாக கீழே தூக்கிப் போடும் இந்த பொருள்களினால் தயாரிக்கப்படும் இந்த தண்ணீர் இருந்தாலே போதும். வெற்றிலை கொடி வெயில் காலத்தில் கூட வாடாமல் பாதுகாத்து வளர்த்து விடலாம். இதை மற்ற செடிகளுக்கும் கூட உரமாக கொடுக்கலாம். இந்த இயற்கை கரைசல் கூட தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் இதே முறையில் உங்கள் வீட்டில் உள்ள வெற்றிலை கொடிகளுக்கு கொடுத்து பராமரிக்கலாம்.

- Advertisement -