சனியால் வெல்ல போகும் ராசிகள்

sani astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்திலே நீதிமானாக விளங்க கூடியவர் இந்த சனி பகவான். இவர் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக தரக் கூடிய தன்மையுடையவர். ஆகையால் தான் இவரை கண்டு அனைவரும் அச்சப்படுகிறார்கள். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலங்கள் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது நடந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசியில் இருந்து கும்பத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளார். இந்த இரண்டு ராசியும் சனி பகவானுடைய சொந்த வீடாக கருதப்படுகிறது. இத்தகைய இந்த பெயர்ச்சியால் பல ராசிகள் பாதிப்பு அடைந்தாலும் சில ராசிகள் மட்டும் இவராலேயே அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சனியால் வெல்லப் போகும் ராசிகள்

மீனம் ராசி

இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது. ஆகையால் பொருளாதார நிலை மேம்பட்டு காணப்படும். வெளியூர் பிராயணங்கள் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதில் நல்ல முன்னேற்றம் அடைந்து லாபத்தை பெறுவார்கள்.

பணியிடங்களில் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சனிபகவான முன்னேற்றம் அடையப் போகிற ராசிக்காரர்கள் நீங்கள் முக்கியமானவர். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் நன்மைகளையே செய்ய உள்ளார் அந்த வகையில் மீன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலி ராசிகள் தான்

- Advertisement -

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நன்மை தீமை இரண்டையும் சமமாக கொடுப்பார். புதிய வருமானங்கள் வாய்ப்புகள் அதிகரித்தாலும் கொஞ்சம் சிரமத்துடன் முன்னேற வேண்டும். பணவரவு நன்றாகவே இருக்கும் இதனால் கடன் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய கூடிய வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆகையால் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும். வியாபாரம் தொழில் போன்றவற்றில் எல்லாம் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதானமாக செயல் பட்டால் இந்த பெயர்ச்சியால் ஜாக்பாட் அடித்து விடலாம்.

கும்ப ராசி

சனி பகவானின் சொந்த வீடான கும்ப ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அள்ளி தரப் போகிறார். வேலை செய்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமடைந்து பணவரவு அதிகரிக்கும். இது வரை தடைப்பட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் நடக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் வந்து செல்லும். குடும்பத்தில் கொஞ்சம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கான அற்புதமான காலம் இது என்று சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: சனிப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இந்த பதிவில் உள்ள சனிப்பெயர்ச்சியினால் யோகத்தை பெறக் கூடிய ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதிலும் அவரவர் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -