கோபி மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யும் சுலப முறை இதோ

gopi
- Advertisement -

கோபி மஞ்சூரியன் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சுவைக்கும் சைவ உணவாக இது உள்ளது. மாலை நேரங்களில் சிற்றுண்டியாக இதை அனைவரும் சாப்பிடுவர். குழந்தைகள் முதல் பெரியார் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் உணவாக இதை கூறலாம். இந்த பதிவில் இதை எப்படி சுலபமாக சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

gopi_1

கோபி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

காளிபிளார் – 1/2 கிலோ
அரிசி மாவு – 5 டீஸ்பூன்
கார்ன் மாவு – 4 டீஸ்பூன்
மிளகுப்பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – தேவையான அளவு
குடை மிளகாய் – சிறிதளவு
தக்காளி சாஸ் – 4 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்

கோபி மஞ்சூரியன் செய்முறை:

முதலில் காளிபிளார் குக்கரில் போடு 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கின்னத்தில் அரிசிமாவு, கார்ன்பிளார், மிளகாய்த்தூள், மிளகுப்பொடி ,இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

- Advertisement -

gopi_2

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த காளிபிளார் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், குடைமிளகாய், சோயா சாஸ் , தக்காளி சாஸ் மற்றும் சிவப்பு மிளகாய் சாஸ் சேர்த்து கிரேவி ஆகும் வரை மிதமான தீயில் வைக்கவும்.

பிறகு அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள காளி பிளார் போட்டு உப்பு சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

- Advertisement -

gopi_3

சமைக்க ஆகும் நேரம் -30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
வெந்தய குழம்பு செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Gobi manchurian recipe in Tamil. It is also called as Gobi manchurian seimurai in Tamil or Gobi manchurian seivathu eppadi in Tamil or Gobi manchurian preparation in Tamil.

- Advertisement -