கிரகண நாட்களில் செய்யவேண்டிய கிரகண பரிகாரம்

gragana pariharam in tamil
- Advertisement -

கிரகணங்கள் இருவகை படுகின்றது. ஒன்று சூரிய கிரகணம் மற்றொன்று சந்திர கிரகணம். இந்த இரு கிரகணங்களும் விண்ணில் நிகழ்கின்ற பொழுது ஏற்படும் நிழல்களான ராகு மற்றும் கேது கிரக தன்மையால் பூமியில் தோஷம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. இத்தகைய தோஷம் ஒரு நபர் பிறக்கின்ற ஜாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்கள் சேர்ந்திருக்கும் பொழுதும் கிரகண தோஷம் ஏற்படுகிறது. அந்த வகையில் ஜாதகத்தில் கிரகண தோஷம் கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய செய்து கொள்ள வேண்டிய கிரகண பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகத்துடன் சூரிய கிரகம் சேர்ந்திருந்து,, அதன் காரணமாக சூரிய கிரகண தோஷம் ஏற்பட்டவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து குளித்து முடித்ததும் சிறிய அளவிலான செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி, அதை சூரிய பகவானுக்கு காண்பித்து வீட்டிற்கு வெளியில் சூரிய ஒளி படுகின்ற இடத்தில் அந்த தண்ணீர் பாத்திரத்தை வைத்து விட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுகளை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவதும் இந்த சூரிய கிரகண தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக உள்ளது.

- Advertisement -

தினந்தோறும் காலையில் குளித்து முடித்தவுடன் “ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம்” பாராயணம் செய்வதை வாழ்நாள் முழுவதும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பருவமடையாத ஒரு பெண் குழந்தைக்கு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற புத்தாடையை தானம் செய்வதும் இந்த கிரகண தோஷத்திற்கு சிறந்த நிவாரணமாக உள்ளது.

சூரிய பகவானை சூரிய நாராயணர் எனவும் வைணவர்கள் வழிபடுகின்றனர். எனவே சூரிய பகவானை விஷ்ணு பகவானின் அவதாரமாக கருதி விஷ்ணு பகவானுக்குரிய மந்திரங்களை சூர்யோதயத்தின் பொழுது, சூரியனைப் பார்த்தவாறு துதித்து வருவதாலும் சூரிய கிரகண தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -

ஜாதகத்தில் சந்திர பகவான் ராகு அல்லது கேது பகவானுடன் சேர்ந்திருந்தால், அது சந்திர கிரகண தோஷம் என கருத படுகிறது. இந்த சந்திர கிரகண தோஷம் ஏற்பட்டவர்கள் திங்கட்கிழமைகளில் பால் பாயாசம் தயார் செய்து, அதை பருவமடையாத பெண் குழந்தைக்கு கொடுத்து வருவது நல்லது. மேலும் அக்குழந்தைகளுக்கு தூய வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வதும் இந்த சந்திர கிரகண தோஷம் நீங்குவதற்கான சிறந்த பரிகாரமாக உள்ளது.

ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று இரவு வேளையில் ஒரு வெள்ளி டம்ளர் அல்லது கிண்ணத்தில் பசும்பால் ஊற்றி, அதில் சிறிதளவு சுத்தமான தேன் மற்றும் சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை போட்டு நன்கு கலந்து, பருகி வருவதாலும் சந்திர கிரகண தோஷ பாதிப்புகள் நீங்கும்.

- Advertisement -

எப்படிப்பட்ட கிரகண தோஷங்களையும் போக்கக்கூடிய தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். அந்த சிவபெருமானுக்குரிய மிக சிறந்த மந்திரமாக “மிருத்யுஞ்ஜெய மந்திரம்” திகழ்கிறது. இந்த மந்திரத்தை தொடர்ந்து 1,25,000 துதித்து சிவபெருமானை வழிபட்டாலும், எத்தகைய கிரகண தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: ஜோதிட பரிகாரம்

உங்களுக்கு கல்வி, கலைகளை கற்றுத் தந்த குரு எனப்படும் ஆசிரியர்களுக்கு தங்களால் இயன்ற சேவைகளையும், உதவிகளையும் செய்வதாலும் மேற் சொன்ன சூரிய மற்றும் சந்திர கிரகண தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்படும்.

- Advertisement -