ஒரு சில முக்கியமான ஜோதிட பரிகாரம்

Jothida pariharam in Tamil
- Advertisement -

ஜோதிடம் என்பது கணிதம், வானியல், சாஸ்திரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையாகும். வெகு காலம் முன்பிருந்தே மனிதர்கள் ஜோதிடத்தில் மீது நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொண்டுள்ளனர். நம் நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான மனிதர்கள் பிறக்கும் பொழுதே ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்படி கணிக்கப்படும் ஜாதகத்தில் அவர்கள் பிறந்த நேரத்தில் நட்சத்திரம், கிரகங்கள் போன்றவற்றின் மாறுபாடுகள் காரணமாக சில வகை தோஷங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. அத்தகைய தோஷங்கள் என்ன என்பது குறித்தும், அந்த தோஷங்களில் இருந்து விடுபடக்கூடிய ஜோதிட பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

குரு சண்டாள தோஷம் பரிகாரம்

குரு சண்டாள தோஷத்தை குரு சண்டாள யோகம் என்றும் கூறுவார்கள். ஜாதகத்தில் முழு சுப கிரகமான குருவும் – பாப கிரகமான ராகுவும் இணைந்து எந்த இடத்தில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. குரு சண்டாள யோகம் உண்டான ஜாதகர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், அடிதடி, நீதிமன்ற வழக்கு போன்றவற்றை சந்திப்பவர்களாகவும், திருமண வாழ்வில் தோல்வியற்றவர்களாகவும், அதிக அளவு கடன் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த குரு சண்டாள தோஷம் நீங்க தினந்தோறும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கல்வி, கலைகளை கற்றுத் தந்த குருவுக்கு சேவை செய்வதாலும் குரு சண்டாள யோகத்தின் பாதிப்பு குறையும். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தங்களால் இயன்ற உணவுகளை அளித்து வர வேண்டும். கோயில்களில் இருக்கின்ற யானைகளுக்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை கொடுத்து வருவதும் இந்த தோஷத்தை குறைக்க கூடிய சிறந்த பரிகாரமாக திகழ்கிறது.

கண்ட மூல தோஷம்

ஒரு நபர் பிறக்கின்ற பொழுது சந்திரன் அஸ்வினி, ஆயில்யம், கேட்டை ,மூலம், மகம், ரேவதி ஆகிய இந்த ஆறு நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் இருக்கும் பொழுது அந்த நபருக்கு கண்ட மூல தோஷம் ஏற்படுகிறது. இது கண்ட மூல ஏற்பட்டவர்கள் வாழ்வில் எதிர்பாராத பொருள் விரயங்கள், நெருங்கிய உறவினர்களுக்கு கண்டம், திருப்தி இல்லாத வாழ்க்கை போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

- Advertisement -

கண்ட மூல தோஷம் ஏற்பட்ட நபர்கள் வாழ்வில் இந்த தோஷத்தால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க சந்திரன் மற்றும் ராகு ஆகிய இரண்டு கிரகங்களுக்கு பரிகார பிரீத்தி பூஜைகள் செய்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளையும், புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளும் அணிந்து கொள்ள வேண்டும். ஓம் கம் கண்பதயே நம எனும் மந்திரத்தை தினமும் 108 முறை துதித்து வர வேண்டும். பசுக்களுக்கு பசலைக் கீரையை உணவாக கொடுத்து வருவதும் இந்த தோஷத்தின் பாதிப்புகளை குறைக்கும்.

கட் தோஷம்

ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் செவ்வாய் கிரகமும், சனி கிரகமும் சேர்ந்திருப்பது இந்த கட்டோஷத்தை ஏற்படுத்துகிறது. கட் தோஷம் ஏற்பட்ட நபர்கள் எதிர்மறையான எண்ணங்களுடனும் செயல்களுடன் இருப்பார்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உடல்நல ரீதியிலான பாதிப்புகளையும் சந்திப்பார்கள்.

- Advertisement -

இந்த கட் தோஷம் ஏற்பட்டவர்கள் தங்களின் தோஷம் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்களைப் பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபட்டு அனுமன் சாலிசா துதித்து வர வேண்டும். சனிக்கிழமைகள் தோரும் சனி பகவானுக்கு விரதம் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: திருமண பரிகாரம்

மருந்து வாங்க வசதி இல்லா நபர்களுக்கு தங்கள் பொருட் செலவில் மருந்துகளை வாங்கி தருவதும், இந்த தோஷத்தின் பாதிப்புகளை வெகுவாக குறைக்கும். சிவபெருமான் கோயிலில் சாந்தி கர்மா எனப்படும் சிவபெருமானுக்குரிய அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதாலும் இந்த கட்தோஷத்தின் பாதிப்புகள் குறைந்து நற்பலன்கள் ஏற்படும்.

- Advertisement -