வாழ்நாளில் ஒரு பெண் இந்த ஒரு தெய்வத்தை மட்டும் மறக்கவே கூடாது. வாழ்க்கையில் பல கஷ்டங்கள் தொடர்வதற்கு, இந்த வழிபாட்டை மறந்ததும் ஒரு காரணம்தான்.

women3
- Advertisement -

பொதுவாகவே பெண்களுக்கு இரண்டு இடம் உண்டு. பிறந்த வீடு, புகுந்த வீடு. பிறந்த வீட்டில் பெண்களுக்கு ஒரு குலதெய்வம் இருக்கும். புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் இருக்கும். திருமணமாகி சென்ற பிறகு கணவர் வீட்டு குலதெய்வம் தான், பெண்களின் குலதெய்வம் ஆக இருக்க வேண்டும். அதற்காக பெண்கள் பிறந்த வீட்டில், வழிபாடு செய்த குலதெய்வத்தை அடியோடு மறந்து விட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. புகுந்த வீட்டு தெய்வத்தை, குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, பிறந்த வீட்டு குல தெய்வத்தையும் முறைப்படி வழிபாடு செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பெண்கள் எப்போதும் பிறந்த வீட்டு குல தெய்வத்தையும் மறக்கக்கூடாது. இந்த இரண்டு தெய்வங்கள் தவிர இன்னொரு தெய்வத்தை பெண்கள் மறக்கவே கூடாது. அது எந்த தெய்வம். அந்த தெய்வத்தை பெண்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு அறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கஷ்டங்கள் தீர பெண்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்:
பொதுவாகவே எல்லா மனிதர்களுக்கும் குலதெய்வம், இஷ்ட தெய்வம், இந்த வரிசையில் அடுத்ததாக நிற்பது கிராம தேவதைகள். ஒவ்வொரு ஊருக்குமே ஒரு காவல் தெய்வம் அல்லது காவல் அம்மன் அல்லது அந்த ஊருக்கு கிராம தேவியாக ஒரு தெய்வம் இருக்கும். பிறந்த வீட்டில் இருக்கும்போது அந்த ஊரில் வாழ்ந்த பெண்கள், அந்த தெய்வத்தை வழிபாடு செய்து வந்திருப்பார்கள். புகுந்த வீட்டிற்கு சென்ற பின்பு, பிறந்த வீட்டில் பிறந்த ஊரில் இருக்கும் கிராம தேவியை ஒரு பெண் மறக்கவே கூடாது.

- Advertisement -

கிராம தேவிக்கு எப்போதுமே ஒரு இலகிய மனம் உண்டு. நம்மை வழிபாடு செய்த பெண், புகுந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த பெண்ணை பாதுகாக்க கூடிய வேலையை நிச்சயம் கிராமதேவி செய்யும். கிராம தேவியை அந்தப் பெண் மறந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணை கிராம தேவி நிச்சயம் மறந்து இருக்காது. நம்மை வழிபாடு செய்த பெண் புகுந்த வீட்டில் கஷ்டப்படுகிறது என்றால், இந்த கிராம தேவி ஓடிவந்து அந்த பெண்ணுக்கு துணையாக நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண்கள் திருமணமாகி சென்று விட்டாலும் சரி, வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் பிறந்த ஊரில் கிராம தேவிக்கு திருவிழா, வழிபாடு நடக்கிறது என்றால், தவறாமல் அந்த திருவிழாவுக்கு சென்று அந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, உங்களால் முடிந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பெண்களாகிய நீங்கள் பிறந்த ஊரில், நீங்கள் வழிபாடு செய்த கிராம தேவியை அடிக்கடி சென்று வழிபாடு செய்து வருவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் பிறந்த ஊரில் இப்போது எந்த சொந்த பந்தமும் இல்லை. எல்லோரும் அந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள் என்று கூட வைத்துக் கொள்வோம். ஆனால் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் ஊர் கிராம தேவியை சென்று வழிபாடு செய்து விட்டு வர வேண்டும். அதுதான் சரியான முறை. பெண்களின் உயிர் இருக்கும் வரை உங்கள் சொந்த ஊர் காவல் தெய்வத்தை, கிராம தேவதையை மறக்கவே கூடாது.

இதையும் படிக்கலாமே: இதை வாயில் வைத்துக் கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது உடனே நடக்கும். கொடுத்த வாக்கு தவறவே தவறாது.

தீராத துயரத்திலிருந்து மீண்டு வர, நோய் நொடி அற்ற செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ, எதிரிகள் பிடியிலிருந்து தப்பிக்க, கண் திருஷ்டி யில் தப்பிக்க, ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலிருந்து தப்பிக்க முன்னோர்கள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தேவதை வழிபாடு என்று இந்த நான்கு வழிபாடுகளும் மிக மிக முக்கியம். இந்த நான்கில் நீங்கள் எதையுமே மறக்காதீங்க. தொடர்ந்து இந்த வழிபாடுகளை முறையோடு செய்து வந்தால் குடும்பம் சுபிட்சம் பெரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -