இட்லி சாப்பிடணும்னு ஆசைப்பட்டா அரிசி உளுந்து ஊற வச்சு அரைச்சு புளிக்க வைச்சி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. வெறும் இருபது நிமிஷம் போதும் நல்ல மல்லிப்பூ போல சாப்டான இட்லி ரெடி.

idly-recipe
- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகள் சாப்பிட வேண்டும் என்றால் ஒரு நாள் காத்திருக்க வேண்டும். இதற்கு முதல் நாளே அரிசி உளுந்து இரண்டையும் குறிப்பிட்ட நேரம் வரை ஊற வைத்து அரைத்து அதை ஒரு இரவு முழுவதும் புளிக்க வைத்தால் தான் மறுநாள் இட்லியோ தோசையோ செய்ய முடியும். இப்போது இன்ஸ்டன்ட்டாக மாவு அரைத்து வைக்கும் முறையும் வந்து விட்டது. ஆனால் 20 நிமிடத்தில் நல்ல சாப்டான மல்லிப்பூ இட்லி செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாங்க இந்த சமையல் குறிப்பு பதிவில் அதையும் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இதற்கு முதலில் ஒரு கப் வெள்ளை அவலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தட்டை அவல், தடிமனாக இருக்கும் அவல் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு 20 நிமிடம் தண்ணீர் ஊற்றி அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு பவுலில் ஒரு கப் அவலுக்கு ஒன்றரை கப் அதிகம் புளிக்காத தயிர் எடுத்து அத்துடன் கால் டீஸ்பூன் சமையல் சோடா மாவு சேர்த்து இரண்டு நிமிடம் வரை கை விடாமல் அடித்து கொடுங்கள். இதனால் மாவு நன்றாக பொங்கி வரும். அதன் பிறகு அதில் ஒரு கப் ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அடுத்த ரவை வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே வைத்து விடுங்கள்.

அடுத்து 20 நிமிடம் கழித்து ஊற வைத்த இந்த அவலை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக பிழிந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை நாம் ஏற்கனவே கலந்து வைத்திருக்கும் ரவை தயிர் மாவுடன் சேர்த்து இதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை கலக்கும் போது தண்ணீர் ஊற்றாமல் நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த மாவில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய தேவை கிடையாது. உடனே நாம் இட்லி ஊற்றிக் கொள்ளலாம். அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு எப்போதும் போல இட்லி ஊற்றி வைத்து ஐந்து நிமிடம் வேக விட்டு அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு எடுத்து விடுங்கள். சுவையான மல்லிப்பூ இட்லி தயார்.

இதையும் படிக்கலாமே: குழிப்பணியாரம் சாப்பிடணும் ஆசைப்பட்டா மாவரைச்சி புளிக்க வைக்கணும் என்கிற அவசியம் இல்லை. இரண்டு உருளைக்கிழங்கு இருந்தா சட்டுனு இப்படி குழிப்பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க.

இந்த இட்லி ரெசிபி செய்வது மிக மிக எளிமை தான். இதில் அவல் தயிர் போன்றவை எல்லாம் சேர்த்து செய்வதால் ருசியும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் அடிக்கடி இது போல செய்து சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும். அது மட்டும் இன்றி வேலைக்கு செல்பவர்களுக்கு எல்லாம் இந்த முறையில் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இந்த இன்ஸ்டன்ட் இட்லி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -