இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட இதுவரையிலும் நீங்கள் சுவைத்திடாத சுவையில் ஒரு அருமையான சைட் டிஷ்

kurma
- Advertisement -

வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமைப்பதாக இருந்தால் அதற்காக தொட்டுக்கொள்ள எப்பொழுதும் போல தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி இவற்றை தான் அதிகமாக செய்து கொடுப்போம். கடைகளுக்கு சென்று சாப்பிட்டாலும் இவ்வாறான சைடிஷ்கள் தான் கொடுக்கப்படுகின்றன. எனவே இவற்றை அதிகமாக சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த கொத்தமல்லி, புதினா குருமாவை ஒருமுறை சமைத்து கொடுத்து பாருங்கள். எந்த உணவாக இருந்தாலும் அவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த குருமாவை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

pottu-kadalai-chutney

தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 5 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 6, பீன்ஸ் – 5, காரட் – 1, காலிஃப்ளவர் – சிறிதளவு, புதினா – இரண்டு கைப்பிடி, கொத்தமல்லி – இரண்டு கைப்பிடி, இஞ்சி சிறியது – 2 துண்டு, பூண்டு – 6 பல், சோம்பு – ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய் – அரை கப், பட்டை – இரண்டு துண்டு, கிராம்பு – 2 ஏலக்காய், 2 முந்திரி – 10, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ள வேண்டும். பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர், இவை அனைத்தையும் தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இரண்டு கொத்து புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், 2 கிராம்பு, 2 ஏலக்காய், 2 துண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு, முந்திரி பருப்பு மற்றும் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

coconut2

அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கி அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி புதினா பேஸ்ட் இவற்றுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

veg-kuruma

அதன் பின் குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 5 நிமிடம் இந்த குருமா நன்றாக கொதித்தால் போதும். வீடே மணமணக்கும் சுவையான கொத்தமல்லி புதினா குருமா தயாராகிவிடும். இதனை ஒருமுறை செய்து இட்லி, தோசை அல்லது வேறு எந்த உணவுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பாருங்கள். புதுவித சுவையில் அசத்தலாக இருக்கும்.

- Advertisement -