கிரைண்டரில் மாவு அரைக்கும் பொழுது பழைய வாசனை போக, கிரைண்டர் கழுவும் பொழுது இப்படி கழுவிப் பாருங்கள்!

grinder-lemon

கிரைண்டரில் மாவு அரைக்கும் பொழுது அந்த மாவை எடுத்து விட்ட பின் என்ன தான் நாம் சுத்தம் செய்தாலும், அதிலிருந்து வரும் வாடை நீங்குவதில்லை. அடுத்தமுறை கிரைண்டரில் மாவு அரைக்கும் பொழுது அந்த வாசனையோடு அரைப்பதால் புதிதாக அரைத்த மாவிலும், ஒரு விதமான புளித்த வாடை அடிக்கும். இதனை எளிமையாக நீக்குவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

grinder

கிரைண்டரில் மாவு அரைப்பது என்பதே மிகப் பெரிய வேலையாக இருக்கும். அரைத்து முடித்தபின் கையோடு அதனை கழுவி வைக்காவிட்டால் காய்ந்து போய்விடும். பின்னர் அதை சுத்தம் செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கும். இதனால் மாவு அரைத்து முடித்த உடன் கையோடு கிரைண்டரை கழுவி வைத்துவிட வேண்டும். அப்படி கழுவும் பொழுது வெறும் தண்ணீரை மட்டும் வைத்து கழுவினால் அதில் இருக்கும் மாவினுடைய வாசனை அப்படியே இருக்கும். இதனால் மறுமுறை அரைக்கும் பொழுது அந்த வாசம் நீங்காமல் போய்விடுகிறது.

இதனை சரி செய்வதற்கு ஒவ்வொரு முறை நீங்கள் மாவு அரைக்கும் பொழுது, நீங்கள் பயன்படுத்தி தூக்கி எறிய நினைக்கும் எலுமிச்சை மூடிகளை பத்திரப்படுத்தி வையுங்கள். இந்த மூடிகளை எல்லாம் மாவு அரைக்கும் நேரத்தில், கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். மாவு அரைத்து முடிக்கும் வரை அப்படியே இருக்கட்டும். மாவு அரைத்து முடித்து, மாவை எடுத்தபின் அதனை வடிகட்டி கிரைண்டரில் இறுதியாக ஊற்றி கிரைண்டரை ஆன் செய்து ஒரு சுற்று சுற்றி விடவும்.

elumichai lemon

எலுமிச்சையின் உடைய வாசனை கிரைண்டரில் இருக்கும் மாவு வாசனையை எளிமையாக போக்கிவிடும். அதன் பிறகு சாதாரணமாக தண்ணீர் குழாயை திறந்து வரும் நேரடியான தண்ணீரால் கிரைண்டரை ஐந்து நிமிடம் அலசினால் போதும். புத்தம் புதிதாக மின்னும். அல்லது இந்த குறிப்பும் செய்யலாம்! நீங்கள் கையில் வினிகர் வைத்திருந்தால், வினிகரை தண்ணீருடன் கலந்து கிரைண்டரில் ஒரு சுற்று சுற்றி எடுத்து விட்டு கிரைண்டர் உடைய கல்லை, குழாய் தண்ணீரில் காண்பித்து டூத் பிரஷ் பயன்படுத்தி லேசாக தேய்த்து விடலாம்.

- Advertisement -

கிரைண்டர் காய்ந்ததும் சுத்தமான துணியை வைத்து ஒரு முறை துடைத்து விட்டு, வைக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக வைத்து விட வேண்டும். முடிந்தால் கிரைண்டரை அரை மணி நேரமாவது வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இது இன்னும் நல்ல பலன் கொடுக்கும். கிரைண்டரை மட்டும் ஒரு போதும் நாமே பழுது பார்க்க கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் தகுதி வாய்ந்த கிரைண்டர் ரிப்பேர் செய்யும் டெக்னீசியரிடம் காண்பித்து சரிசெய்து கொள்ளுங்கள்.

vinegar

கிரைண்டர் மட்டுமல்ல மிக்ஸி சுத்தம் செய்யும் பொழுதும், வினிகர் மற்றும் எலுமிச்சை தோல் பயன்படுத்தி ஒரு முறை சுற்றி எடுத்து விட்டால், மீண்டும் அந்த பழைய வாசனை வராமல் இருக்கும். மிக்ஸியில் பிளேடுகளில் தங்கி இருக்கும் அழுக்குகளும் சுலபமாக வெளியில் வந்துவிடும். மிக்ஸி எப்பொழுதும் சுத்தமாக பளிச்சிடும். கிரைண்டர் மற்றும் மிக்ஸியின் வெளி புறங்களிலும் சிறிதளவு வினிகர் பயன்படுத்தி துணியால் துடைத்து எடுத்தால் புத்தம் புதியதாக எப்பொழுதுமே உங்களுடைய சமையலறையில் மின்னிக் கொண்டிருக்கும்.

இதையும் படிக்கலாமே
2021 புத்தம் புதிய ஆண்டில் நீங்களும் பெரும் அதிர்ஷ்டசாலியாக இந்த 5 விஷயங்களை கடைபிடிக்கலாமே! தூங்கியது போதும் விழுத்துக் கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.