தீபாவளிக்கு உடையாத குண்டு குண்டு குலாப் ஜாமுன் எப்படி செய்யலாம்? குலோப் ஜாமூன் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன?

gulab-jamun-recipe
- Advertisement -

தீபாவளி வந்துவிட்டாலே எல்லோருக்குமே மனதில் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். விதவிதமான பட்டாசுகளும், வகைவகையான பலகாரங்களும் வீட்டில் இருக்குமே என்கிற மகிழ்ச்சி தான் எல்லோருக்கும். குறிப்பாக தீபாவளி நன்னாளில் இப்பொழுது இருக்கும் இளம் தாய்மார்கள் குலோப் ஜாமுன் செய்வது அதிகமாகி வருகிறது. மிக சுலபமாக செய்யக்கூடிய இந்த குலோப் ஜாமுன் பலருக்கு எப்படியோ உடைந்து விடுவது உண்டு. உடையாமல் குண்டு குண்டாக, முத்து முத்தான குலோப் ஜாமுன் செய்வது எப்படி? அதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

gulab-jamun-flour

குலோப் ஜாமூன் செய்யும் போது நீங்கள் முதலில் எந்த பிராண்டை தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்பது மிகவும் முக்கியம். தரமான குலோப்ஜாமூன் மாவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 250 கிராம் அளவிற்கு குலோப்ஜாமூன் மாவு நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அதனுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு போல நன்கு திரண்டு வந்ததும் அப்படியே மூடி போட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

30 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் உள்ளங்கையில் வைத்து உருட்ட வேண்டும். நீங்கள் உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டால் ஒட்டாமல் மேலும் விரிசல் விடாமல் நன்கு ரவுண்டாக வரும். குலாப் ஜாமுன் மாவை உருண்டை பிடிக்கும் பொழுது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அழுத்தம் கொடுத்தால் வெளியில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு.

gulab-jamun-fry

பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எல்லா பக்கமும் ஒரே மாதிரியான பொன் நிறத்தில் வேகும் படி திருப்பி போட்டு திருப்பி போட்டு நன்கு வேக எடுக்க வேண்டும். 250 கிராம் குலோப் ஜாமுன் மாவிற்கு 600 கிராம் சர்க்கரையும், 600ml தண்ணீரும் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். சரியான கம்பி பதம் வர பத்து நிமிடம் வந்த பிறகு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடத்தில் குலோப் ஜாமுன் ஊறுவதற்குத் தேவையான அளவிற்கு கம்பி பதம் வந்துவிடும். ஒருமுறை காய்ச்சிய பிறகு மீண்டும் சர்க்கரை பாகை சூடுபடுத்த கூடாது. நீங்கள் செய்யும் பொழுதே சரியான அளவுகளில் பாகை செய்து விட வேண்டும். இல்லை என்றால் குலோப் ஜாமுன் கெட்டுப் போக வாய்ப்புகள் உண்டு. பின்னர் பொன்னிறமாக பொரித்து எடுத்து உள்ள குலோப் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து 2 மணி நேரம் நன்கு ஊற விட வேண்டும்.

gulab-jamun0

சிலரெல்லாம் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து வைத்து விடுவார்கள். அப்பொழுது தான் மறுநாள் நன்கு ஊறி மிகவும் மிருதுவான குலோப் ஜாமுன் நமக்கு கிடைக்கும். அன்றைய நாளில் செய்வதாக இருந்தால் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து நீங்கள் பரிமாறலாம். இதே முறையில் நீங்களும் செய்தால் உடையாத குண்டு குண்டு குலோப் ஜாமுன் உங்கள் வீட்டிலும் இந்த தீபாவளிக்கு தயாராகிவிடும்.

- Advertisement -