குண்டு குண்டு ‘குலோப்ஜாமூன்’ விரிசல் விழாமல் குண்டாகவே வருவதற்கு நச்சுனு 4 டிப்ஸ் இதோ!

gulab-jamun-recipe
- Advertisement -

தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் ஞாபகம் வந்து விடுகிறது. இனிப்பு வகைகளில் மிகவும் சுலபமாக செய்யக் கூடியது குலோப்ஜாமுன் தான். குலோப்ஜாமுன் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தின்னத் தின்ன திகட்டாத ஒரு இனிப்பு வகை குலோப்ஜாமுன். எவ்வளவு இருந்தாலும் ‘லபக் லபக்’ என்று முழுங்கி விடுவோம். இப்படி அனைவரும் விரும்பி உண்ணும் குலோப்ஜாமுன் வீட்டில் செய்ய வேண்டும் என்றாலே ஒரு பயம் வந்து விடுகிறது. பல பேருக்கு குலோப்ஜாமூன் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கும். அவைகள் இல்லாமல் எப்படி குண்டு குண்டு குலோப்ஜாமுன் குண்டாகவே இருப்பது போல் சூப்பராக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

gulab

குலோப் ஜாமுன் செய்வதற்கு முதலில் அதை எப்படி பிசைய வேண்டும்? என்கிற நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாவின் பிராண்ட் நன்றாக இருக்குமா? என்பதை பார்த்து தேர்ந்தெடுங்கள். பின்னர் வாங்கி வந்த மாவை போட்டு ஒரேடியாக தண்ணீர் ஊற்றாமல், சிறிது சிறிதாக ஊற்றி அழுத்தம் கொடுக்காமல் பிசைய வேண்டும். சப்பாத்திக்கு பிசைவது போல் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் குலோப்ஜாமுன் சாப்டாக வராது. மேலும் உள்ளே இருக்கும் மாவும் அழுத்தம் கொடுப்பதால் வேகாமல் போய் விட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

தண்ணீரை மட்டும் பார்த்து பார்த்து ஊற்றுங்கள். அதிகமாகி விடக்கூடாது, குறைவாகவும் விட்டுவிடக்கூடாது. பிசைந்து முடித்ததும் கைகளில் ஒட்டாமல், பாத்திரத்திலும் ஒட்டிக் கொள்ளாமல் பந்து போல் வர வேண்டும். பின்னர் மாவை சிறியதாகவும் இல்லாமல், பெரியதாகவும் இல்லாமல் மீடியம் சைஸ் கோலி குண்டு அளவிற்கு உருட்ட வேண்டும். உருட்டும் பொழுது முதலில் சிறிது அழுத்தம் கொடுத்து இரண்டு சுற்று உருட்டி விட்டு அதற்குப் பிறகு நீங்கள் உருட்டும் சுற்றுகளை அழுத்தம் கொடுக்கவே கொடுக்காதீர்கள். லேசாக உருட்டுங்கள் போதும்.

gulab-jamun-flour

அது உங்களுக்கு வரவில்லை என்றால் உள்ளங்கையை எடுத்துவிட்டு இரண்டு விரல் நுனியில் உருட்டிக் கொள்ளுங்கள். அப்போது அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி உருட்டினால் தான் மாவு விரிசல் விழாமல் வரும். நீங்கள் வாங்கிய குலோப்ஜாம் மாவு பாக்கெட்டிலேயே சர்க்கரையின் அளவு குறிப்பிட்டிருக்கும். ஆனால் அந்த அளவிற்கு நீங்கள் பாகு தயாரிக்க வேண்டாம். அதை விடக் குறைவாகவே எடுத்துக் கொள்ளுங்கள். 800 கிராம் சர்க்கரை எடுக்க சொன்னால் நீங்கள் 600 கிராம் எடுத்தால் போதும். நான்கில் ஒரு பங்கை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சர்க்கரைப்பாகு வீணாக போகும்.

- Advertisement -

எந்த அளவிற்கு சர்க்கரை எடுக்கிறார்களோ! அதே அளவிற்கு தண்ணீரும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகு காய்ச்சும் பொழுது ஒரு கம்பி பதத்திற்கு வந்தால் போதும். அதை விட சற்று குறைவாகவே வரலாம். இல்லை என்றால் சர்க்கரை கட்டியாகி விடும். பத்து நிமிடம் கொதிக்க விட்டால் கண்ணாடி போன்ற பதத்திற்கு வந்துவிடும். இதுவே சரியான பதமாக இருக்கும். பாகு சூடாக இருக்கும் பொழுதே உருண்டைகளை எண்ணையில் பொரித்து போட்டு விட வேண்டும்.

gulab-jamun1

அடுப்பை மீடியம் ப்ளேமில் வைத்துக் கொண்டு, சமையல் எண்ணெயையும் மிதமான சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டைகளாக மெதுவாகப் போட்டு வரவேண்டும். ஒரேடியாக நிறைய உருண்டைகளை போடாதீர்கள். இரண்டு விநாடிக்கு ஒரு உருண்டைகள் என்று போட்டுக் கொண்டே வாருங்கள். உருண்டைகள் பொரிந்து வர அதற்கேற்றார் போல் திருப்பி விடுங்கள். எல்லா பக்கமும் ஒரு சேர பொன்நிறமாக சிவக்க எடுத்து அப்படியே பாகில் சேர்த்து விட வேண்டும்.

- Advertisement -

gulab-jamun0

சூடான பாகில் சூடான உருண்டைகளை சேர்க்கும் பொழுது வேகமாக உறிஞ்சிக் கொள்ளும். எனவே உள்ளே வரை சென்று கட்டி தட்டாமல் மிகவும் சாஃப்ட்டாக குண்டு குண்டு குலோப் ஜாமூன் பார்ப்பதற்கே அழகாக நீங்கள் விரும்பியபடி குண்டாகவே சூப்பராக வந்து விடும். இந்த முறை நீங்களும் இப்படி உங்கள் வீட்டில் முயற்சி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்று விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
5 நிமிஷத்தில் எதுவும் சேர்க்காமல் மோர்க்குழம்பு நொடியில் ரெடி பண்ணிடலாம். எப்டின்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -