சகல செல்வங்களையும் பெற உதவும் லக்ஷ்மி காயத்ரி மந்திரம்

lakshmi-1

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை அடைய பலர் கடுமையாக உழைத்தாலும் செல்வம் சிலரிடம் சேராமல் இருக்க காரணம் மகாலட்சுமியின் பரிபூரண அருள் இல்லாமல் இருப்பதே. மகாலட்சுமியை வணங்கி கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நிச்சயம் செல்வம் சேர்க்க ஒரு நல்ல வழி பிறக்கும். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.

lakshmi

லக்ஷ்மி காயத்ரி மந்திரம்:

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்:
ஓம் தெய்வங்களில் சிறந்தவளே, விஷ்ணுவின் பத்தினியே, உங்களை வணங்குவதன் பயனாக எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன்.

lakshmi

மகாலட்சுமியை மனதார வணங்கி தினமும் இந்த மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக கடன்கள் தீர வழி பிறக்கும், செல்வம் சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

- Advertisement -

லட்சுமி வழிபாடு

முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும். அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

mahalakshmi

லட்சுமி வழிபாட்டிற்குரிய தினங்கள்

செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன. இந்த தினங்களில் லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்க வழி வகை செய்கிறது.

mahalakshmi

லட்சுமி மந்திர பலன்கள்

லட்சுமி தேவியை முறையாக பூஜித்து, விரதமிருந்து வழிபாடு செய்யும் நபர்களுக்கு செல்வ மகளான லட்சுமியின் முழுமையான அருட்பார்வை கிடைக்கிறது. இதனால் வாழ்வில் வளமை பெருகுகிறது. செல்வ சேர்க்கை அதிகரிக்கிறது. வறுமை நிலை நீங்கும். புதிய வீடு, வாகனம் என வாழ்வில் வசதி வாய்ப்புகள் ஏற்படும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கினிய இல்லற வாழ்வு அமையும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர வழி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும்.விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மனக்கவலைகள், குறைபாடுகள் இல்லாத வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
பொற்குவியலை அள்ளித்தரும் ஸ்வர்ண பைரவர் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Mahalakshmi gayatri mantra in Tamil. It is also called as Gayatri manthiram or Gayathiri manthiram in Tamil.