தலையில கை வைத்தாலே உங்க முடி வேரோடு வருதா? அதுக்காக பதட்டபடாதீங்க உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த மூன்றே பொருள் போதும் முடி கொட்டுறதை உடனே நிறுத்திடலாம்.

hair fall
- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கக் கூடியது தான். முடி உதிர்வது எல்லோருக்குமே இயல்பான ஒன்று தான் இதன் அளவு அதிகரிக்கும் போது தான் அதை பிரச்சனைக்குரிய விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து பத்து, இருவது முடிகள் வரை தலைவாரும் போதும், தலைக்கு குளிக்கும் போது உதிரும். இது குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியது இல்லை. இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் அதிகமான முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சுலபமான ஹேர் பேக்கை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தயார் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்வை கட்டுப்படுத்த ஹேர் பேக்
இந்த ஹேர் பேக் தயாரிக்க இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் அதிகம் புளிக்காத தயிரையும் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் விளக்கெண்ணை நாலு டீஸ்பூன் சேர்த்த பிறகு இவையெல்லாம் நன்றாக கலந்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை தண்ணீர் ஊற்றாமல் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்த பிறகு ஒரு வடிகட்டியில் சேர்த்து இதன் சாறை மட்டும் தனியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஹேர் பேக்கை போடுவதற்கு முன்பாக உங்கள் தலையில் நன்றாக எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு முடியில் சிக்கு ஏதும் இல்லாமல் தலைமுடியை விரல்களாலே சீவி விட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் ஹர்பாக்கில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து எடுத்து உங்கள் தலையின் வேர் பகுதிகளில் இந்த பேக்கை ஒற்றிய எடுத்த பின் மைல்டாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு ஹேர் பேக்கை தலையின் அனைத்து வேர்ப்பகுதிகளிலும் படும்படி ஒற்றி எடுத்த பிறகு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலை முடியை அலசி விடுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை முதல் முறை தேய்த்து குளித்த உடனே உங்களின் முடி உதிர்வு பிரச்சனை பெரும் அளவு குறைவதை நீங்களே உணர முடியும். ஏனெனில் இந்த பேக்கில் சேர்த்து இருக்கும் வெங்காயம் தலையின் வேர்கால்களில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடிய ஊட்டச்சத்து பொருளாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இதில் சேர்க்கப்படும் தயிரும் முடியின் வளர்ச்சியை தூண்டக் கூடிய ஒன்று. அது மட்டும் இன்றி இதுவும் தலையில் பொடுகு இருந்து அதனால் முடி உதிர்வு இருந்தால் அதுவும் நீங்கி விடும். தயிர் சேர்த்து நீங்கள் குளிக்கும் பொழுது இந்த பிரச்சனைகள் சரி ஆவதுடன் முடி வளர்ச்சி அதிகரிக்கும். விளக்கெண்ணெயும் முடியை சாஃப்ட்டாக மாற்றி முடி நீளமாக வளர்வதற்காக உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: பேன், பொடுகு, தொல்லையால் உங்கள் தலைமுடி அதிகமாக வேகமாக கொட்ட தொடங்குதா? உங்கள் ஸ்கேல்பை சட்டுன்னு சுத்தம் செய்ய இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பேக்கை நீங்கள் வாரம் ஒரு முறை பயன்படுத்தி வரும் பொழுது முடி உதிர்வு பிரச்சனை முழுவதுமாக சரியாகி விடும். அது மட்டும் இன்றி புதிய முடிகள் அதிகமாக வளரத் தொடங்குவதுடன், முடி விழுந்து சொட்டையான பகுதிகளில் கூட புதிய முடி வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த ஹேர் பேக் முறை உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -